பாட்டி : “உணர்ச்சிகளை வெளிப்படுத்துவோம் என்கிற பாடத்தைத்தான் அடுத்து கற்றுத் தரப்போகிறேன். இதுவும் நன்நடத்தைகளில் ஒன்றாகும்.
நவீன் : “உணர்ச்சிகள் என்றால் என்ன பாட்டி?”
பாட்டி : “உணர்ச்சிகள் என்பது குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது சூழலினால் ஏற்படும் கவலை, மகிழ்ச்சி, ஆச்சர்யம், கோபம், ஏமாற்றம், ஏக்கம், பயம் போன்ற உணர்வுகளின் வெளிப்பாடாகும். சூழலுக்கேற்ற உணர்ச்சிகளை நீங்களை வெளிப்படுத்துவது போலவே பிறர் உணர்சிகளையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இதனை சுருக்கமாக சொல்வதனால் பிறர் மீது இரக்கம் காட்டுதல் என்றும் கூறலாம்.”
மீனா : “அது எவ்வாறு பாட்டி?”
பாட்டி : “அதாவது ஒரு குறிப்பிட்ட சூழலில் வேறொருவர் எப்படி உணர்கிறார் என்பதை கற்பனை செய்து கவனத்துடன் பதிலளிக்கும் அல்லது அந்த சூழலை கையாளும் திறனாகும். உதாரணமாக உங்களுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார் என எண்ணிக் கொள்ளுங்கள். அவருடைய பெற்றோர் இறந்து விட்டார்கள். இந்நிலையில் உங்கள் நண்பனை நீங்கள் எவ்வாறு கையாள்வீர்கள்?”
மேகனா : “நிச்சயமாக பெற்றோரை இழந்த தருணம் மிகவும் கவலையாக உணர்வான். அழுவான். நான் அவனை அந்த சூழலிருந்து மீட்க சமாதானப்படுத்துவேன். அழும் போது ஆறுதலாக அவனுடனே இருப்பேன் பாட்டி”
நவீன் : “நான் எனது நண்பனுக்கு விருப்பமான ஏதாவது ஒரு விளையாட்டுப் பொருளை பரிசளிப்பேன். அதனுடன் விளையாடும் போது அவனுடைய மனநிலை மாறுமில்லையா பாட்டி?”
பாட்டி : “ஆமாம் அதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அத்துடன் அவனது பெற்றோர் பற்றி நீங்கள் அவனிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தால் அவனால் இழப்பிலிருந்து மீள முடியாது. பெற்றோர்களின் இழப்பு மட்டுமல்ல. போட்டிகளில் தோற்றுப் போன ஒருவரின் மனநிலையும் கவலைக்குரியது அவருடைய மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை ஊகித்து அவரது மனதை காயப்படுத்தாது ஆறுதலாக இருக்க வேண்டும். புரிகிறதா?”
நவீன், மேகனா, மீனா : “ஆமாம் பாட்டி. நன்றாக புரிகிறது”
பாட்டி : “சரி பிறர் உணர்வுகளை புரிந்துக் கொள்வதையும் அதற்கு மதிப்பளிப்பதையும் பார்த்தோம். மேலும் உங்களது நல் உணர்ச்சிகளை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.
இவ்வாறு நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பையும் அன்பையும் உணர்வீர்கள்.”
நவீன், மேகனா, மீனா : “நாங்கள் இதனைப் பின்பற்றி நடப்போம் பாட்டி”
மகிழ்ச்சி, துக்கம், ஆச்சர்யம், ஏக்கம், ஏமாற்றம் போன்ற அனைத்து உணர்ச்சிகளும் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும். உணர்ச்சிகளை நிர்ணயிப்பது அவர் அவரது சூழ்நிலைகளே! ஆகவே பிறரின் உணர்ச்சிகளை கேலி செய்யாமல் மதித்து நடக்க வேண்டும். இப்பாடத்தில் கூறப்பட்டுள்ள உங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய அனைத்து செயல்பாடுகளையும் பின்பற்றி நடப்பதன் மூலம் பாதுகாப்பான சூழலையும் அன்பையும் உணர்வீர்கள்.
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
01) உணர்ச்சிகள் என்றால் என்ன?
…………………………………………………………………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………………
02) உங்கள் தோழன் அல்லது தோழி ஒரு போட்டியில் வென்றால் நீங்கள் வெளிப்படுத்தக் கூடிய உணர்வு யாது?
…………………………………………………………………………………………………………………………………………………………
03) நீங்கள் ஒரு போட்டியில் தோல்வியுற்றால் வெளிப்படுத்தும் உணர்வு யாது?
…………………………………………………………………………………………………………………………………………………………
04) பாதுகாப்பற்ற அல்லது அறிமுகமற்றவர்களை சந்தித்தால் அதனை உடனடியாக யாரிடம் தெரிவிக்க வேண்டும்?
…………………………………………………………………………………………………………………………………………………………
05) உணர்ச்சிகளைச் சரியாக வெளிப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மை என்ன?
…………………………………………………………………………………………………………………………………………………………