• முகப்பு
  • நடத்தைகள்
  • 6.1 நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்போம்

6.1 நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்போம்

உள்ளடக்கம்

கிராமத்தில் வசிக்கும் நவீன், மேகனா, மீனா ஆகியோர் சகோதரர்களாவர். மூவரும் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட அவர்களது தாத்தாவும் பாட்டியும் அவர்களை பாடம் கற்றுக் கொள்ள அழைத்தனர். மிக்க மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் தாத்தா பாட்டியின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டனர்.

பாட்டி : “பசங்களா, மனித  நன்நடத்தைகள் என்ற தலைப்பின் கீழ் நானும் தாத்தாவும் உங்களுக்கு பின்வருவனவற்றை கற்றுத் தருகிறோம். அவையாவன :

  • நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்தல்
  • பிறரை புண்படுத்தாதிருத்தல்
  • மூத்தோரை மதித்தல்
  • யாருடனும் ஒப்பீடு செய்யாதிருத்தல்
  • உணர்ச்சிகளைப் வெளிப்படுத்தல்”

தாத்தா : “சரி. பாட்டி சொன்ன தலைப்புகளில், இன்று நாம் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பது பற்றியும் அவர்களுக்கு உதவி செய்வது பற்றியும் பார்க்கலாம்.”

நவீன், மேகனா : “சரி தாத்தா”

தாத்தா : “நல்ல நண்பர்கள் என்பவர்கள் நமக்குள் நல்ல பண்புகள் வளர்வதற்கு காரணமானவர்கள். நாமும் நல்ல நண்பர்களாய் இருக்க வேண்டும், நல்ல பண்புகள் உடையவர்களை நண்பர்களாக ஏற்க வேண்டும். ஏனென்றால் தீய நட்புக்கள் தீய குணங்களை தான் நமக்குள் புகுத்தும்”

பாட்டி :  “குழந்தைகளா, நல்ல நண்பர்களைத் தேரந்தெடுப்பது போல நாமும் அவர்களுக்கு நல்ல நண்பர்களாய் இருக்க வேண்டும். ஒரு நல்ல நண்பன் எப்படி இருப்பான் என்பதை பற்றி பார்க்கலாம்.

  • நல்ல நண்பன் என்பவன் தன்னுடைய நண்பர்களை வெற்றி பெறச் செய்வதற்கு வழிகாட்டுதலாய் இருப்பான்.
  • எப்பொழுதும் நல்ல விஷயங்களைப் பற்றி பேசுவான்.
  • பெற்றோர், ஆசிரியர் மற்றும் மூத்தோருக்கு மரியாதை செலுத்துபவனாகவும் உதவுபவனாகவும் இருப்பான்.
  • இன, மத, பணக்காரன், ஏழை என்கிற எந்த வேறுபாடுமின்றி பழகுவான்.
  • தேவையுடையோருக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய முயற்சிப்பான்.
  • எப்பொழுதும் நல்லதை செய்வான். உங்களையும் நன்மைகள் செய்ய தூண்டுவான்.
  • தீய பழக்கவழக்கங்கள் இவனிடம் இருக்காது.
  • நீங்கள் தீய வழியில் செல்வதைத் தடுப்பான்.
  • நீங்கள் வெற்றி பெறுவதை விரும்புவான். உங்கள் வெற்றியில் அதிகம் மகிழ்ச்சியடைவான்.
  • நல்ல நண்பன் உங்கள் நலன் விரும்பியாய் இருப்பான்.
  • உங்கள் மகிழ்ச்சியில் மட்டுமல்ல, துன்பங்களிலும் துணை நிற்பான்.
  • உங்கள் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை புரிபவனாக இருப்பான்.
  • உண்மை, நேர்மை, இரக்கம், பணிவு ஆகிய குணங்களின் இருப்பிடமாக இருப்பான்.

ஒரு நல்ல நண்பனிடம் பிரதிபலிக்கும் குணங்கள் இவை. இந்த குணங்களை ஒவ்வொரு நண்பனும் வளர்த்துக் கொண்டு தம் நண்பர்களுக்கு நல்ல நண்பனாய் இருக்க வேண்டும்.”

தாத்தா : “அத்துடன் உங்கள் நண்பர்களின் வெற்றியைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது. மனதார அவர்களை வாழ்த்த வேண்டும். பொறாமை நற்குணங்களை அழித்து விடும். பாட்டி சொன்ன நற்பண்புகளை உங்களிடம் உருவாக்கிக் கொள்ளுங்கள். நண்பனுக்கு நண்பன் உதவி செய்யுங்கள். உங்கள் நண்பன் பள்ளிக்கு வரவில்லையென்றால், அவனிடம் விசாரியுங்கள். இது உங்களுக்குள் நட்பை வளர்க்கும். உங்களுக்கு தெரிந்த நல்லவற்றை உங்கள் நண்பர்களுக்கும் கற்றுக்கொடுங்கள்.”

பாட்டி : “பூவுடன் சேர்ந்தால் நாறும் மணக்கும் என்பது போல் நல்ல நண்பர்களாக நாமும் மாறி நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து ஒருவருக்கொருவர் துணையாக மகிழ்ச்சியுடன் இருப்போம்.”

நவீன் : “புரிகிறது பாட்டி. நாங்களும் நல்ல நண்பர்களாய் இருப்போம்.”

மீனா : “அத்துடன் நல்ல நண்பர்களுடனே பழகுவோம்”

தாத்தா, பாட்டி : “மிக்க நன்று”

சுருக்கம்

நல்ல நண்பர்கள் வாசனைத் திரவியம் போன்றவர்கள். நல்ல நண்பர்களுடன் பழகும் போது அருமையான பல நற்பண்புகள் நம்மிடையே உருவாகும். தீய நண்பர்களால் நமது வாழ்க்கையில் பல கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டி வரும். ஆகவே, நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது இப்பாடத்தில் கூறப்பட்டுள்ள குணங்களை அடிப்படையாகக் கொள்வது சிறந்தது. நல்ல நண்பர்கள் எப்பொழுதும் உங்களை வழி தவற விடமாட்டார்கள். நல்ல நண்பர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நாமும் உதவி புரிந்து ஒருவருக்கொருவர் துணையாய் இருப்போம்.

பயிற்சி

பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
01) இப்பாடத்தின் மூலம் கற்றுக்கொண்ட விஷயம் யாது?
……………………………………………………………………………………………………………………………………………………….
……………………………………………………………………………………………………………………………………………………….

02) நன்நடத்தை என்ற தலைப்பின் கீழ் வரக்கூடிய மூன்று விஷயங்களைக் குறிப்பிடுக.
1. ………………………………………………………………………………………………………………………………………………….
2. ………………………………………………………………………………………………………………………………………………….
3. ………………………………………………………………………………………………………………………………………………….

03) கண்ணனின் குடும்பத்தினர் விடுமுறையைக் கழிக்க எங்கு சென்றிருந்தனர்?
………………………………………………………………………………………………………………………………………………………..

04) நல்ல நண்பனிடம் காணப்படும் குணங்கள் மூன்றை எழுதுக.
1. ………………………………………………………………………………………………………………………………………………….
2. ………………………………………………………………………………………………………………………………………………….
3. ………………………………………………………………………………………………………………………………………………….

05) “பூவுடன் சேர்ந்தால் ………………………………………………. மணக்கும்”. இந்தக் கூற்றின் இடைவெளியில் வரவேண்டிய சொல்லை இடைவெளியினுள் எழுதுக.