அப்பா : “தலைமைத்துவப் பண்புகளில் நன்னடத்தை நெறிமுறைகளைப் பேணுதல் மற்றும் நேர்மை போன்ற பண்புகளும் ஒன்றாகும். நாம் தலைமை தாங்ககூடிய எந்தவொரு பதவியானாலும் அதற்கென்று சட்டத்திட்டங்கள் காணப்படும். தலைவர் என்ற ரீதியில் நன்னடத்தை நெறிமுறைகளைப் பேணி நேர்மையுடனும் நீதியுடனும் நடந்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும்.”
கண்ணன் : “அவற்றை எவ்வாறு பேணி நடப்பது அப்பா?”
அப்பா : “நேர்மை மற்றும் நன்னடத்தை நெறிமுறைகளைப் பேணி நடப்பது எவ்வாறு என்பதை இனி பார்க்கலாம்.
கண்ணன் : “இத்தனையையும் பேணினால் சிறந்த தலைவன் என்ற அங்கீகாரத்தை பெற முடியுமல்லவா அப்பா?”
அப்பா : “ஏற்கனவே நான் கற்றுத் தந்த தலைமைத்துவப் பண்புகளுடன் இதனையும் பின்பற்றுவதுடன், நேரத்திற்கு வேலை செய்யும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டால் நிச்சயமாக சிறந்த தலைவர் என்ற அங்கீகாரத்தைப் பெற முடியும் கண்ணா”
கண்ணன் : “அப்பா, அப்படியானால் நேரத்திற்கு வேலை செய்யும் பழக்கத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்”
அப்பா : “அடுத்த பாடத்தில் கற்றுத் தருகிறேன். அதற்கு முன் இப்பாடத்திற்குரிய பயிற்சிகளை செய்து காட்டுங்கள்”
நேர்மை மற்றும் நன்னடத்தை நெறிமுறைகளைப் பேணுவது தலைமைத்துவப் பண்புகளில் ஒன்றாகும் என்பதை இப்பாடத்தின் மூலம் கற்றுக் கொண்டிருப்பீர்கள். குறிப்பிட்ட இந்த நற்பண்பை பேணுவதற்கான வழிமுறைகளையும் அறிந்திருப்பீர்கள். ஆகவே இப்பாடத்தில் கூறப்பட்டுள்ளது போல் நாமும் அவற்றை பேணி சிறந்த தலைவராகுவோம்.
பயிற்சி – 1
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
1) இப்பாடத்தின் மூலம் நீங்கள் கற்றுக் கொண்ட தலைமைத்துவப் பண்பு யாது?
………………………………………………………………………………………………………………………………………………………..
2) நேர்மை மற்றும் நன்னடத்தை நெறிமுறைகளை பேணி நடப்பது எவ்வாறு என்பதற்கு ஐந்து வழிமுறைகளைக் குறிப்பிடுக.
I. …………………………………………………………………………………………………………………………………………….
II. ……………………………………………………………………………………………………………………………………………
III. ………………………………………………………………………………………………………………………………………….
IV. …………………………………………………………………………………………………………………………………………..
V. …………………………………………………………………………………………………………………………………………….
பயிற்சி – 2
அடைப்புக்குள் இருக்கும் சொற்களைக் கொண்டு இடைவெளி நிரப்புக.
(சிறந்த, நடவடிக்கை, நன்னடத்தை நெறிமுறை, சட்டத்திட்டங்கள், விழுப்புணர்வை)
1) நாம் எந்த பதவிக்கு தலைமை பொறுப்பேற்றாலும் அதற்குரிய …………………………………………………………………. காணப்படும்.
2) நேர்மை மற்றும் …………………………………………………………………… பேணி நடப்பது தலைமைத்துவப் பண்புகளில் ஒன்றாகும்.
3) ………………………………………………………………… தலைவர் என்ற அங்கீகாரத்தைப் பெறமுடியும்.
4) சட்டத்திட்டங்கள் பற்றிய ………………………………………………………….. தம் அணியினருக்கும் கற்றுத்தருவது தலைவரின் பொறுப்பாகும்.
5) குற்றம் செய்பவர்கள் மீது உரிய …………………………………………………………… எடுக்கப்பட வேண்டும்.