அப்பா : “தலைமைத்துவப் பண்புகளில் ஒன்றான பேச்சாற்றல் என்பது வெறுமனே தாளில் எழுதி மனப்பாடம் செய்து பேசுவதல்ல. இயல்பாக தடுமாறாமல் மேடைகளில் பொது இடங்களில் கூட்டங்களில் பேசுவதைக் குறிக்கின்றது.”
கண்ணன் : “நமக்கு அறிமுகமற்றவர்கள் முன் எப்படி அப்பா பேசுவது? அதற்கு எளிதான வழிமுறைகளைக் கற்றுத் தாருங்கள்”
அப்பா : “பொது இடங்களில், பள்ளி மற்றும் கல்லூரி மேடைகளில், விழாக்களில், கூட்டங்களில் முதல் தடவை பேசும் ஒவ்வொருவருக்கும் பதற்றமும், உள்ளூற ஒரு நடுக்கமும், பயமும், தடுமாற்றமும் தோன்றுவது இயல்பானது. தவறுகள் ஏற்படும் என்பதற்காக கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்தாமல் விடுபவன் முட்டாள்! வாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்தபவர்களால் தான் தலைவர்களாக முடியும்.”
கண்ணன் : “காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று தானே சொல்கிறீர்கள்?”
அப்பா : “ஆமாம் கண்ணா. பழமொழி மூலம் அழகாய் உரைத்து விட்டீர்கள். பேச்சாற்றலை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பதற்கான குறிப்புக்களை இங்கே குறிப்பிடுகிறேன்.
கண்ணன் : “ஏன் அப்பா பேசும்போது பழமொழிகள், கதைகள், படிப்பினையான நகைச்சுவைகளைக் கூற வேண்டும் என்கிறீர்கள்?”
அப்பா : “அவற்றை சேர்ப்பதன் மூலம் நம்முடைய பேச்சு கேட்பவர்களுக்கு சலிப்பை தராது. அவர்கள் நாம் பேசுவதை விரும்பி கேட்பார்கள்”
கண்ணன் : “இயல்பாக பேசக்கூடிய ஆற்றலால் கிடைக்கும் நன்மைகள் என்ன?”
அப்பா : “அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் பின்வருமாறு:
இவ்வாறான நன்மைகள் பேச்சாற்றலாலே சாத்தியமாகிறது. ஆகவே இயற்கையாக நாமும் நமக்குள் இருக்கும் பேச்சாற்றலை வெளிக்கொணர்ந்து தலைமைத்துவத்திற்கான இந்த பண்பையையும் பெற்றுக் கொள்வோம்”
கண்ணன் : “நான் இன்றே பேச்சாற்றலை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிகளை ஆரம்பிக்கிறேன். நான் எதிர்காலத்தில் சிறந்த மாணவத் தலைவனாக இருப்பேன்”
அப்பா : “நல்லது கண்ணா! அப்பாவிடம் பேசிக் காட்டுங்கள் நான் உங்கள் தவறுகளை திருத்துகிறேன்.”
கண்ணன் : “சரி அப்பா”
பேச்சாற்றல் என்பது தலைமைத்துவப் பண்புகளில் ஒன்றாகும். இதனை விருத்தி செய்துக்கொள்வதற்கான வழிகாட்டல்கள் இப்பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி மேடைகளில், கூட்டங்களில் தயக்கமின்றி பேசுங்கள். அப்பொழுது தான் இங்கே கூறப்பட்டுள்ள நன்மைகளைப் பெற முடிவதோடு எதிர்காலத்தில் ஒரு சிறந்த தலைவராகவும் முடியும்.
பயிற்சி
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
1) இப்பாடத்தின் மூலம் கற்றுக்கொண்ட தலைமைத்துவப் பண்பு யாது?
……………………………………………………………………………………………………………………………………….
2) மேற்குறிப்பிட்ட பண்பை விருத்தி செய்துக் கொள்வதற்கான வழிகாட்டல்களில் இரண்டைக் குறிப்பிடுக.
I. …………………………………………………………………………………………………………………………..
II. ………………………………………………………………………………………………………………………….
3) பேச்சாற்றலை வெளிப்படுத்தும் இடங்கள் மூன்றைக் குறிப்பிடுக.
……………………………………………………………………………………………………………………………………….
4) நம் பேச்சுக் கேட்பவர்களை கவர்வதற்காக நாம் கையாளக்கூடிய உத்தி யாது?
……………………………………………………………………………………………………………………………………….
5) ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ எனும் பழமொழியின் கருத்து யாது?
……………………………………………………………………………………………………………………………………….