• முகப்பு
  • தலைமைத்துவப் பண்புகள்
  • 1.1 ஒரு தலைவராக இருப்போம்

1.1 ஒரு தலைவராக இருப்போம்

உள்ளடக்கம்

கண்ணனின் அப்பா செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் கண்ணன் அங்கே வந்தான்.

கண்ணன் : “அப்பா, எங்கள் பள்ளியில் மாணவத் தலைவர்களை நியமித்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் எனக்கும் மாணவத் தலைவனாக வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது. அதற்கு நான் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதிகள் என்னவென்று சொல்லித் தர முடியுமா?’’

அப்பா : “மிக நல்ல ஆர்வம் கண்ணன். நிச்சயமாக எதிர்காலத்தில் நீங்கள் சிறந்த மாணவத் தலைவனாக அப்பா வாழ்த்துகிறேன். அத்துடன் உங்களுக்கு தலைமைத்துவப் பண்புகள் பற்றியும் இப்பொழுது கற்றுத் தருகிறேன். கவனமாக புரிந்துக் கொள்ளுங்கள். தலைமைத்துவத்திற்கான முக்கிய தகுதிகளாவன :

  • தலைவராக இருத்தல்.
  • தன்னம்பிக்கை.
  • வெற்றி, தோல்வியை சமமாக கருதும் மனப்பான்மை.
  • கோபத்தைக் கட்டுப்படுத்தல்.
  • பிறர் உணர்வுகளை மதித்தல்.
  • சிறந்த பேச்சாற்றல்.
  • நேர்மை மற்றும் நன்னடத்தை நெறிமுறைகளைப் பேணுதல்.
  • நேரம் தவறான்மை.

இந்த பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ளும் போது மிகச்சிறந்த தலைவராகலாம். இவை ஒவ்வொன்றும் மிக முக்கியமானது. தலைவராக எப்படி இருப்பது என்பதை கற்றுத் தருகிறேன. பின்னர் ஒவ்வொரு பண்பையும் தனித்தனியாக விளக்குகிறேன்’’

கண்ணன் : “சரி அப்பா’’

அப்பா : “தலைவராக இருப்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் சினிமாத்துறையில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இன்று அரசியலிலும் தனக்கான இடத்தை பிடித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்தைக் குறிப்பிடலாம். சினிமாவிற்கு வரும் முன் பேருந்து நடத்துனராக இருந்தவரை, மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டியது அவருக்கே உரித்தான ஸ்டைல் தான். நடப்பதிலும் கூட அவரிடம் அது வெளிப்பட்டது. யாருக்காவும் தன்னை மாற்றிக் கொள்ளாமல் அவருடைய பாணியில் இருந்தார். பட இயக்குனர்கள் சொல்வார்கள்; நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நேரம் தாழ்த்தாமல் படப்பிடிப்புக்கு வருகைத் தருவார் என்று. நேரம் என்பது ஒரு தலைவனுக்கு முக்கியமானது என்பதை அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நான் பெரியவன் என்ற அகங்காரமில்லாமல் இன்றும் அவர் இருக்கிறார். வயது அவருக்கு எண்ணிக்கை தான். ஏனென்றால் நடிப்பதை அன்று போலவே இன்றும் துடிப்புடன் செய்கிறார். ஒரு தலைவனுக்கு உழைப்பும் முக்கியம் என்பதை இதன் வாயிலாக அறியலாம். மேடைகளில் கூச்சப்படாமல் சிறப்பாக பேசி பிறருடைய கவனத்தை தன் பக்கம் திருப்புகிறார். இவ்வாறு தலைமைத்துவத்திற்கான அத்தனை பண்புகளையும் கொண்டிருப்பதாலேயே அவருக்கான சூப்பர் ஸ்டார் என்ற இடம் இன்னும் அவருக்கான இடமாக திகழ்கிறது.’’

கண்ணன் : “நாம் பிறரை போல் காப்பி அடிக்கக் கூடாது என்கிறார்களே அப்பா?’’

அப்பா : “ஆம் கண்ணா நிச்சயமாகக் கூடாது. அவரிடமிருந்து கற்றுக் கொள்ள தான் வேண்டும். அவரை போல் முழுமையாக மாறுவதில் பயனில்லை. அவருக்கான இடம் அவருக்குரியது. மாணவத்தலைவர், நாட்டின் தலைவர், விளையாட்டு அணியின் தலைவர், ஏனைய குழுக்களின் தலைவர் என எல்லாத் தலைமைப் பொறுப்புக்களுக்கும் இது பொருந்தும். ஆகவே, நமக்கான இடத்தை தான் நாம் பிடிக்க முயற்சிக்க வேண்டும். பிறருடையதை அல்ல. சிறந்த தலைவர்களுக்கான இன்னும் சில குணாதிசயங்கள் உள்ளன. அவையாவன :

  • தான் என்ற அகங்காரம் இல்லாதிருத்தல்.
  • பணிவு.
  • ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்களை மதித்தல்.
  • மனிதாபிமானம் உடையவராக இருத்தல்.
  • எதிரணியே ஆனாலும், எதிரியே என்றாலும் அவர்கள் வெற்றியைக் கண்டு பொறாமைப் படாதிருத்தல்.
  • திட்டமிடல்.
  • நேர நிர்வாகம்.
  • உழைப்பு அல்லது விடாமுயற்சி.
  • தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளல்.
  • தீய பழக்கங்களுக்கு அடிமையாகாதிருத்தல்.
  • நல்ல நண்பர்களை உருவாக்கிக் கொள்ளல்.
  • கற்றல், வெளிப்புற செயல்பாடுகள், விளையாட்டு, விழாக்களில் ஒரு மாணவனாக பங்கேற்றல்.
  • வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளல்.

இவற்றை நாம் செயல்படுத்துவதனால் தலைவராக இருக்க முடியும் கண்ணா’’

கண்ணன் : “நான் இன்று முதல் சிறந்த தலைமைத்துவ பண்புகளுடன் இருப்பேன் அப்பா!

சுருக்கம்

பாடத்தில் கூறப்பட்டுள்ளப் படி உங்களிடம் இல்லாத நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதன் மூலமும் தீய பண்புகளை கலைவதன் மூலமும் நிச்சயமாக நீங்கள் ஒவ்வொருவரும் சிறந்த எடுத்துக்காட்டான தலைவராவீர்கள்.

பயிற்சி

பயிற்சி

பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.

1) தலைமைத்துவத்திற்கான பண்புகள் மூன்றைக் குறிப்பிடுக.
I. ……………………………………………………………………………………………………………………..
II. …………………………………………………………………………………………………………………….
III. ……………………………………………………………………………………………………………………

2) நடிகர் ரஜினிகாந்திடம் காணப்படும் தலைமைத்துவ பண்புகளில் ஒன்றைக்
குறிப்பிடுக.
…………………………………………………………………………………………………………………………………………

3) கண்ணன் வரும்போது கண்ணனின் அப்பா என்ன செய்து கொண்டிருந்தார்?
…………………………………………………………………………………………………………………………………………

4) கண்ணன் எதிர்காலத்தில் ஏற்றுக் கொள்ள ஆர்வம் கொண்ட தலைமைப் பொறுப்பு
எது?
…………………………………………………………………………………………………………………………………………