கண்ணன் பள்ளிக்கும் யாழினி பாலர் பள்ளிக்கும் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் அம்மா தண்ணீர் பாட்டிலில் நீர் நிரப்பிக் கொண்டிருந்தார்.
கண்ணன் : ‘‘அம்மா, எங்களுக்காக தினமும் வெந்நீர் தயாரிக்கிறீர்களே… எதற்காக அம்மா?’’
அம்மா : “ஏனென்றால், ஆரோக்கியமான செரிமானத்திற்கும், உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கும், மேலும் நீர் கொதிக்கும் போது கிருமிகள் அழிகிறது, தேவையற்றை கொழுப்பு கரைக்கப்பட்டு உடல் எடையை பேணுகிறது, ஐலதோஷத்தை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது எனப் பல்வேறு நன்மைகள் வெந்நீரினால் கிடைக்கின்றன. அதனால் சுட வைத்து ஆறிய அல்லது மிதமான சூட்டில் உள்ள நீரை பயன்படுத்தும் படி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்’’
கண்ணன் : ‘‘கட்டாயமாக வெந்நீரை மட்டுமே நாம் குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டுமா?’’
அம்மா : ‘‘இல்லை கண்ணா, சுத்தமான நீரைப் பயன்படுத்தலாம். நீரின் இயல்புகள் மூன்று. அவையாவன நிறம், சுவை, மணம் இந்த மூன்று இயல்புகளும் நீருக்கு கிடையாது. நீரின் நிறம், சுவை, மணம் என்பன மாறுபடுமெனில் நிச்சயமாக அது சுத்தமான நீர் கிடையாது. நாம் அதனை அருந்தக் கூடாது. அசுத்தமான நீர் நம் உடலுக்கு தீங்குகள் மட்டுமே விளைவிக்கும். ஆனால் சுத்தமான நீர் அருந்துவதனால் நமக்கு நன்மைகள் மட்டுமே விளைகின்றன. அவ்வாறான நன்மைகளாக :
மேலும் நாம் அதிகமாக நீர் அருந்துவதன் மூலம் தலைவலியை தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. அத்துடன் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களுக்கு சிகிச்சையளிக்கவும் உதவி புரிகிறது.
அசுத்தமான நீரினால்,
இவற்றிலிருந்து நம்மை காக்கவே சுத்தமான மற்றும் வெந்நீரை அருந்த வேண்டும். நீரை சுத்திகரிப்பதற்காக குளோரின் இடப்படும். குளோரின் இட்ட நீர் சுத்தமானது. அந்த நீரையும் நாம் அருந்தலாம்’’
கண்ணன் : ‘‘அம்மா, வெந்நீர் என்றால் மிகவும் சூடான நீரையா சொல்கிறீர்கள்?’’
அம்மா : ‘‘அதிக சூடான நீரை அருந்துவதால் நம் நாக்கு சுட்டு விடுமில்லையா கண்ணா? கையில் அல்லது காலில் அந்த வெந்நீர் தவறுதலாக கொட்டி விட்டால், நம்மால் அவ்வளவு சூட்டை தாங்க முடியாதல்லவா? இதனால் தழும்பு கூட ஏற்படலாம். ஆகவே நாம் கொதித்து ஆறிய நீரை அல்லது மிதமான சூட்டில் உள்ள நீரை தான் அருந்த வேண்டும்.’’
கண்ணன் : “சரி அம்மா. எங்களுக்கு வெந்நீரை பாட்டில்களில் ஊற்றி விட்டீர்கள் தானே. நான் எடுத்து செல்கிறேன்.’’
அம்மா : “சரி கண்ணா’’
சுத்தமான நீருக்கு சுவை, மணம், நிறம் கிடையாது. கொதித்து ஆறிய நீரினாலும் சுத்தமான நீரினாலும் பல நன்மைகள் விளைகின்றன. அவை என்னவென்று இப்பாடத்தின் மூலம் அறிந்திருப்பீர்கள். ஆகவே சுத்தமான மற்றும் வெந்நீரை அருந்தி நாமும் ஆரோக்கியமாக வாழ்வோம்.
பயிற்சி
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
1) நீரின் இயல்புகள் யாவை?
…………………………………………………………………………………………………………………………………………………….
2) நீரை சுத்திகரிக்க பயன்படுவது யாது?
…………………………………………………………………………………………………………………………………………………….
3) சுடுநீர் அருந்துவதன் மூலம் கிடைக்க கூடிய நன்மைகள் இரண்டை எழுதுக.
I. ……………………………………………………………………………………………………………………………………………….
II. ………………………………………………………………………………………………………………………………………………
4) அதிகமாக அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் ஒன்றைக் குறிப்பிடுக.
………………………………………………………………………………………………………………………………………………………
5) அசுத்தமான நீரை அருந்துவதனால் விளையும் தீங்குகள் இரண்டைக் குறிப்படுக.
I. ……………………………………………………………………………………………………………………………………………….
II. ………………………………………………………………………………………………………………………………………………