• முகப்பு
  • சுத்தம்
  • 3.4 சோப்பைப் பயன்படுத்தி கைகளை கழுவுவோம்

3.4 சோப்பைப் பயன்படுத்தி கைகளை கழுவுவோம்

உள்ளடக்கம்

யாழினி சாப்பிடுவதற்காக கைகளை கழுவிக் கொண்டிருந்தாள். அப்பொழுது கண்ணனும் அங்கே கைகளை கழுவுவதற்காக வந்தான். யாழினி கைகளை அவசரமாக கழுவியதைக் கண்ட கண்ணன், ‘‘யாழினி, நீ கை கழுவும் முறை தவறு’’ என்று தன் தங்கையிடம் சொன்னான்.

யாழினி :- ‘‘ஏன் அண்ணா?’’

கண்ணன் :- ‘‘யாழினி நீ கைகளை மிக அவசரமாக கழுவுகிறாய். அதனால உன் கைகளில் இன்னும் அழுக்கு, தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் இருக்கும். சோப்பு போட்டு எப்படி கை கழுவுறதுனு எங்க பள்ளில ஆசிரியர் சொல்லி கொடுத்திருக்காங்க. நான் எப்படினு சொல்லிட்டே செய்து காட்டுகிறேன். அதே மாதிரி நீயும் பண்ணு யாழினி. அப்போ தான் நம்ம கைகளில் இருக்க அழுக்குகள் போயிடும். நமக்கு நோயும் வராது’’

யாழினி :- ‘‘சரி அண்ணா… நீங்க சொல்லுங்க.’’

கண்ணன் :- ‘‘என் கைகளை நன்றாக உற்று நோக்கிக் கொண்டே நான் சொல்வதை கவனமாக
புரிந்துகொள் யாழினி.

  1. முதலில் சோப்பை எடுத்து கைகளில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
  2. அப்புறம் கைகளில் நுரை வருமளவுக்கு நன்றாக தேய்க்க வேண்டும்.
  3. அப்புறம் நாம செனிட்டைஸர் பயன்படுத்தும் போது பண்ணின மாதிரியே நம்ம விரல்களால்
    அனைத்து விரல் இடுக்குகளையும் தேய்க்க வேண்டும்.
  4. இப்படி 10 வினாடிகளுக்கு செய்ய வேண்டும்.
  5. கடைசியாக கைகளிலுள்ள சோப்பு முழுவதுமாக போகும் வரை கைகளை கழுவ வேண்டும்.

இதே மாதிரி தான் தினமும் நாம் கைகளை கழுவ வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நம்ம கைகளில் காணப்படும் அழுக்கு, பாக்டீரியாக்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் எல்லாமே ஓடி போயிடும்’’

யாழினி :- ‘‘நான் பண்றேன். சரியானு பாருங்க அண்ணா’’

அப்பா :- ‘‘அண்ணனும் தங்கையும் இங்கே என்ன பண்றீங்க?’’

யாழினி :- ‘‘அப்பா, நாங்க கை கழுவுறதுக்காக வந்தோம். கண்ணன் அண்ணா எனக்கு எப்படி சோப்பைப் பயன்படுத்தி கைகளை கழுவுறதுனு சொல்லிக் கொடுத்தாங்க.’’

அப்பா :- ‘‘ரொம்ப நல்ல விஷயம் கண்ணா… நீங்க பள்ளில கத்துக்குற நல்ல விஷயங்கள யாழினுக்கும் இதே மாதிரி சொல்லிக் கொடுங்க. அப்போ தான் நம்ம யாழினி பாப்பாவும் பள்ளிக்கு போனதுக்கப்புறம் கண்ணன் மாதிரியே நல்லா கத்துப்பாங்க’’

கண்ணன் :- ‘‘சரி. அப்பா இன்னைக்கு காலையில சூப்பர் மார்க்கெட்ல நாங்க செனிட்டைஸர்(Sanitizer) பயன்படுத்தினோம். ஆனால் அதுக்கு அப்பறம் வீட்டுக்கு போய் சோப்பு போட்டு கைகளை கழுவ சொன்னீங்களே.. ஏன்?’’

அப்பா :- ‘‘ஆமாம் கண்ணா… ஏனென்றால் செனிட்டைஸர் (Sanitizer) பயன்படுத்துவதே விட சோப்பு பயன்படுத்தும் போது தான் நிறைய பாக்டீரியாக்கள் அழிகிறது. அதனால் தான் வீட்டில் சோப்பு பயன்படுத்துறோம்’’

கண்ணன் :- ‘‘அப்புறம் ஏன் நிறைய பொது இடங்களில் சோப்பு வைப்பதில்லை?’’

அப்பா :- ‘‘அந்த பகுதிகளில் குழாய் இல்லாமல் இருக்கலாம். ஒருவர் பயன்படுத்திய சோப்பை பெரும்பாலும் இன்னொருவர் பயன்படுத்த விரும்புவதில்லை. சோப்பு பயன்படுத்தினால் நீரை உபயோகித்து கைகளை கழுவ வேண்டும். அப்படி நீர் பயன்படுத்தினால் அந்த இடத்தில் நீர் சிந்தி அலங்கோலமாகி விடும். யாராவது அந்த நீரில் வழுக்கி விழவும் வாய்ப்பிருக்கிறது.’’

அம்மா :- ‘‘ஆமாம். அப்பா சொல்வது சரி…. அதுமட்டுமல்லாமல் பொது இடங்களில் செனிட்டைஸர்(Sanitizer) பயன்படுத்துவது எளிதானது. அதோடு செனிட்டைஸர்(Sanitizer) பயன்படுத்தி விட்டு அப்படியே சாப்பிடக்கூடாது. ஏனென்றால் செனிட்டைஸரானது, நம்ம கைகளில் திரை மாதிரி தங்கியிருக்கும்… அது ஒரு தற்காலிக தீர்வு தான். அதனால் பொது இடங்களில் நாம செனிட்டைஸர் (Sanitizer) பயன்படுத்தினாலும் கண்டிப்பாக வீட்டிற்கு வந்ததும் கைகளை சோப்பைக் கொண்டு கழுவி கொள்வது சிறந்தது. அத்துடன் சிறு குழந்தைகளுக்கு செனிட்டைஸர் (Sanitizer) பயன்படுத்தக் கூடாது. சோப்பை குழந்தைகள் முதல் பெரியவங்க வரை எல்லோரும் பயன்படுத்தலாம்’’

கண்ணன் :- ‘‘அம்மா, நீங்களும் அப்பாவும் சொல்லுவது சரி. இதையெல்லாம் உலக சுகாதார அமைப்பு செய்யும்படி அறிவுறுத்தியிருக்காங்க?’’

அம்மா :- ‘‘ஆமாம் கண்ணா…. உலக மக்களின ஆரோக்கியதற்காக தான் உலக சுகாதார அமைப்பு செயல்படுது. அவங்க நம்ம நலனுக்காக மட்டும் தான் இதையெல்லாம் சொல்றாங்க. நாம ஆரோக்கியமாக இருந்தால் தான் சுறுசுறுப்பாக இருக்க முடியும்’’

கண்ணன் :- ‘‘நான் இனி உலக சுகாதார அமைப்பு சொல்ற சுகாதார முறைகளை பேணி நடப்பேன் அம்மா… அப்போ தான் அப்பாவை மாதிரி உங்களை மாதிரி நானும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.’’

யாழினி :- ‘‘நானும் சுகாதார முறைகளைப் பின்பற்றி ஆரோக்கியமாக இருப்பேன்’’

சுருக்கம்

உலக சுகாதார அமைப்பு நம் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ளது. அதற்காவே சில சுகாதார வழிமுறைகளை நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. அவ்வாறான வழிமுறைகளில் சோப்பைக் கொண்டு கைகளை கழுவதலும் ஒன்றாகும். சாப்பிடும் முன், சாப்பிட்ட பின், வேலைகள் செய்த பின் என மற்ற செயல்பாடுகளின் பின்னும் கைகளை சோப்புக் கொண்டு சுத்தம் செய்வது சுகாதார ஒழுக்கமாகும். இதனை தினசரி வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டும். இப்பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிமுறைகளின் படி கைகளை சோப்புக் கொண்டு கழுவுவதனால் கிருமித்தொற்றிலிருந்து நாம் பாதுகாப்பு பெறலாம். ஆரோக்கியமான வாழ்க்கையில் சுத்தம் முக்கியமானது.

பயிற்சி

பயிற்சி – 01

சரியான விடையின் கீழ் கோடிடுக.

1) பொது இடங்களில் சோப்பிற்கு பதிலாக கைகளை சுத்தம் செய்ய அதிகம் பயன்படுத்தப்படுவது?
1. சானிட்டைசர்        2. ஹேன்ட்வாஸ்                             3. ஷாம்பு

2) யார் தவறான முறையில் கைகளை கழுவியது?
1. கண்ணன்                2. கண்ணனின் அம்மா               3. யாழினி

3) யாழினுக்கு சோப்பைக் கொண்டு கைகளை எப்படி கழுவ வேண்டும் என்று கற்றுக் கொடுத்தது யார்?
1. கண்ணன்                2. கண்ணனின் அப்பா                3. யாழினி

4) பின்வருவனவற்றில் நுண்ணுயிர் எது?
1. சோப்பு                       2. பாக்டீரியா                                  3. குழாய்

 

பயிற்சி – 02
சோப்பைக் கொண்டு கைகளை கழுவும் முறையை பிள்ளைகளுக்கு படிமுறைப்படி செய்து காட்டுமாறு கூறுக.

 

பயிற்சி – 03
அத்தியாயம் ஒன்றில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கற்றுக்கொண்ட புதிய வார்த்தைகளைக் நினைவு கூறுக.