• முகப்பு
  • சுத்தம்
  • 3.2 பள்ளியின் முக்கிய பகுதிகளுக்கான குப்பைத்தொட்டி

3.2 பள்ளியின் முக்கிய பகுதிகளுக்கான குப்பைத்தொட்டி

உள்ளடக்கம்

அன்று பள்ளியில் நடந்தவற்றை கண்ணன் தன் தாயிடம் சுவாரஷ்யமாக சொல்லிக் கொண்டிருந்தான். கண்ணனின் தாயும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.

கண்ணன் :– ‘‘அம்மா இன்னைக்கு நிறைய விஷயம் கத்துகிட்டேன். ஒரு வகுப்பறைக்கு குப்பைத்தொட்டி ஏன் கட்டாயம் வேணும்னு எங்க சுற்றுச்சூழல் பாட ஆசிரியர் சொல்லித் தந்தாங்க. ஆனால் அம்மா…
எனக்கு ஒரு சந்தேகமிருக்கு. நான் ஒரு கேள்வி கேட்குறேன்… பதில் சொல்றீங்களா?’’

அம்மா :- ‘‘நல்ல விஷயம் கண்ணா. வீட்டில் உள்ள குப்பைத்தொட்டியையும் உங்க ஆசிரியர் சொல்லிக் கொடுத்த மாதிரியே உபயோகப்படுத்தனும். கேளு கண்ணா… நிச்சயமாக பதில் சொல்றேன்’’

கண்ணன் :– ‘‘அம்மா, எங்க பள்ளியில் ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஒரு குப்பைத்தொட்டி இருக்கு. ஆனால், எங்க வகுப்பறைக்கு வெளியே எங்க பள்ளியில் சில இடங்களில் எங்க வகுப்பறையில இருக்குறத விட பெரியளவில் சில குப்பைத்தொட்டிகள் இருக்கு… அது வீண் செலவு தானே அம்மா.. நமக்கு ஏற்கனவே வகுப்பறையில் இருக்குற குப்பைத்தொட்டி போதுமே அம்மா.. அப்புறம் எதுக்கு வெளியேயும் வெச்சிருக்காங்க?’’

அம்மா :- ‘‘உங்க கிட்ட சில கேள்விகள் கேட்கிறேன். அதற்கு பதில் சொல்றீங்களா? அதுக்கு அப்பறம் கண்ணாவின் கேள்விக்கு நான் பதில் சொல்றேன்’’

கண்ணன் :– ‘‘சரி அம்மா’’

அம்மா :- ‘‘கண்ணா, வகுப்பறைக்குள் மட்டுமா குப்பைகள் இருக்கும்?’

கண்ணன் :– ‘‘இல்லை..’’

அம்மா :- ‘‘வகுப்பறைக்குள் இருக்குற குப்பைய போட ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஒரு குப்பைத்தொட்டி கண்டிப்பாக தேவை தானே?’’

கண்ணன் :– ‘‘ஆமா அம்மா.. கண்டிப்பாக தேவை… இல்லனா வகுப்பறை குப்பை கூளமாகிடும்னு ஆசிரியர் சொன்னாங்க’’

அம்மா :- ‘‘கல்வி தொடர்பான மேலதிகாரிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பள்ளியில் வேலை பார்க்கும் மற்ற ஊழியர்கள் எல்லோரும் குப்பை எதுவும் போடணும்னா வகுப்பறையில் உள்ள குப்பைத்தொட்டியில் கொண்டு வந்து போட முடியுமா?’’

கண்ணன் :– ‘‘அனுமதி இல்லாம யாரும் வகுப்பறைக்குள் வரமுடியாதே அம்மா.’’

அம்மா :- ‘‘ஆமா! அதனால தான் வகுப்பறைக்கு வெளியே பள்ளியில் சில முக்கிய இடங்களில் குப்பைத்தொட்டி வெச்சிருக்காங்க’’

கண்ணன் :– ‘‘பள்ளிமுதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே இருக்க அந்த குப்பைத்தொட்டிகளை பயன்படுத்த முடியதா அம்மா?’’

அம்மா :- ‘‘முடியும் கண்ணா.. வகுப்பறை தவிர்த்து பள்ளியில் இருக்குற மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் அதிகமா பயன்படுத்தக்கூடிய இடங்கல்ல கண்டிப்பா குப்பை இருக்கும். உதாரணமாக, கேண்டீன்…
கேண்டீன்ல போய் வாங்குற உணவை ஏதாவது ஒரு பழைய காகிதத்திலோ அல்லது பாலிதீன்லயோ சுற்றி கொடுப்பாங்க… பிஸ்கட் மாதிரி சில உணவுகள் பாலிதீன் பைகளில் வரும்… குளிர்பானங்கள் பிளாஸ்ட்டிக் பாட்டில்களில் வரும். இவற்றையெல்லாம் வாங்கி சாப்பிட்டு விட்டு பிளாஸ்டிக் பாட்டில்கள், எஞ்சிய உணவுகள், பாலிதீன் பை, காகிதம்னு எஞ்சும் குப்பைகளை எல்லோரும் குப்பைத்தொட்டில போட மாட்டாங்க. தரையில் அல்லது மேசையில் போட்டுட்டு போயிருவாங்க.

  • அதனால அந்த இடம் அசுத்தமாகும்.
  • எஞ்சிய உணவுகள் மூலம் துர்வாடை வரும்.
  • அந்த உணவை ஈக்களும் மொய்க்கத் தொடங்கும்.
  • இனிப்பான உணவு என்றால் எறும்புகள் வரும்.
  • மரத்தில் இருந்து விழும் இலைகள், அழுகிய கனிகள் போன்றவையும் பள்ளி சுற்றுச்சூழலின் அழகை கெடுத்து விடும்.
  • காகிதங்கள், பிளாஸ்ட்டிக் போத்தல்கள், பொலித்தின் பைகள் போன்றன மண்ணோடு உக்காத பொருட்கள்.
  • இதன் காரணமாக பிளாஸ்ட்டி பாட்டில்கள், பாலிதீன் பைகளில் மழைக்காலங்களில் நீர் தேங்கும்.
  • இவ்வாறு தேங்கி நிற்கும் மழை நீரில் கொசு முட்டையிடும். இதனால் டெங்கு போன்ற
    உயிர்க்கொல்லி நோய்கள் ஏற்படும்.
  • நம்மையும் சுத்தமாக வைத்திருப்பதோடு சுற்றியுள்ள சூழலையும் நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • நாம் சூழலை சுத்தமாக வைத்திருக்க தவறினால் நம் உடலில் வெவ்வேறு வகையான நோய்கள் ஏற்பட்டு நம் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

அதனால தான் பள்ளியில் வகுப்பறைகளில் மட்டுமல்ல அங்கு காணப்படுகின்ற கேண்டீன், ஆசிரியர்களுக்கான பிரத்யேக அறை, அலுவலகம், நூலகம் போன்ற மிக முக்கியமான இடங்களில் குப்பைத்தொட்டிகள் காணப்படுகின்றன.’’

கண்ணன் :– ‘‘இப்போ புரிகிறது அம்மா.. பள்ளியின் முக்கிய இடங்களுக்கு கண்டிப்பாக குப்பைத்தொட்டி தேவை’’

அம்மா :- ‘‘கண்ணாவின் கேள்விக்கு பதில் கிடைத்தது தானே?’’

கண்ணன் :– ‘‘ஆமாம் அம்மா… நன்றி’’

சுருக்கம்

வகுப்பறை தவிர்த்து பள்ளியின் சில முக்கிய இடங்களில் காணப்படும் குப்பைத்தொட்டிகள் பள்ளியின் சுற்றுச்சூழலை அழகாகவும், சுத்தமானதாகவும் வைத்திருக்கிறது. வகுப்பறையில் காணப்படும் குப்பைத்தொட்டிகளை வகுப்பின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே உபயோகப்படுத்துவர். இதனால் வகுப்பறைச் சுத்தம் மட்டுமே பேணப்படுகிறது. ஆனால் பள்ளியின் முக்கிய இடங்களில் காணப்படும் குப்பைத்தொட்டிகளைப் பள்ளிக்கு வருகை தரும் வெளிநபர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிமுதல்வர் மற்றும் மற்ற ஊழியர்கள் என யாவரும் உபயோகிக்கலாம். இதனால் பள்ளியின் சுற்றுச்சூழலின் சுத்தம் பேணப்படுகிறது.

பயிற்சி

பயிற்சி – 01

பின்வரும் கேள்விகளுக்கு விடை தருக.

1) பள்ளியில் குப்பைத்தொட்டிகள் காணப்படும் முக்கியமான இடங்கள் மூன்று தருக.
I. …………………………………………………………………
II. ………………………………………………………………..
III. ……………………………………………………………….

2) பள்ளியில் மிக முக்கியமான இடங்களில் காணப்படும் குப்பைத்தொட்டிகளை பயன்படுத்தும் வெளிநபர்கள் மூவரைக் குறிப்பிடுக.
I. …………………………………………………………………
II. ………………………………………………………………..
III. ……………………………………………………………….

3) பள்ளியில் காணப்படும் குப்பைகள் இரண்டை பெயரிடுக.
I. ………………………………………………………………..
II. ……………………………………………………………….

4) கொசு எங்கே முட்டையிடும்?
……………………………………………………………………………………………………………………..

5) அழுகிய அல்லது எஞ்சிய உணவை நாடி வரும் பூச்சி எது?
………………………………………………………………………………………………………………………

பயிற்சி – 02

அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொற்களை பயன்படுத்தி இடைவெளி நிரப்புக.
(துர்வாடை, அசுத்தம், குப்பை, பாலிதீன் பைகளில், மாணவர்களும், உயிக்கொல்லி, மக்காத பொருட்கள், சுற்றுப்புறச்சூழலை, குப்பைத்தொட்டி, பிணி)
1) பள்ளியில் நூலகம் போன்ற சில முக்கியமான இடங்களுக்கு ………………………………………………………………….. தேவை.

2) கண்ட கண்ட இடங்களில் ………………………………………………………. இடக்கூடாது.

3) …………………………………………………………………. சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

4) மிக முக்கிய இடங்களில் காணப்படும் குப்பைத்தொட்டியை பள்ளிமுதல்வர், ஆசிரியர்கள் மற்றும் …………………………………………………… பயன்படுத்தலாம்.

5) எஞ்சிய உணவுகள் மூலம் ………………………………………………….. வரும்.

6) டெங்கு ஒரு …………………………………………………….. நோய் ஆகும்.

7) நோய் என்பதன் ஒத்த பொருளுடைய சொல் ………………………………………………. ஆகும்.

8) சுத்தம் என்பதன் எதிர் சொல் ………………………………………………. ஆகும்.

9) …………………………………………………………………… மழைக்காலங்கில் நீர் தேங்கும்.

10) பிளாஸ்டி பாட்டில், பாலிதீன், காகிதம் போன்றவை மண்ணோடு …………………………………………………………………………. ஆகும்.