அடுத்த பாடவேளைக்கு மணியடித்ததும் சுற்றுச்சுழல் பாட ஆசிரியர் இரண்டாம் வகுப்பிற்கு சென்றார்.
மாணவர்கள் :- ‘‘குட் மார்னிங் டீச்சர் (Good morning Teacher – ஆசிரியருக்கு காலை வணக்கம்)’’
ஆசிரியர் :- ‘‘குட் மார்னிங் (Good morning – காலை வணக்கம்)… பசங்களா, வகுப்பறைச் சுத்தமா
இருப்பதில் குப்பைத் தொட்டியின் முக்கியத்துவம் பற்றி இன்னைக்கு படிக்கலாம். எல்லோரும் கவனமா கேட்கனும். ஏதாவது சந்தேகம்னா கை உயர்த்தி அனுமதி வாங்கிட்டு கேட்கனும். அது தான் சரியான முறை. புரிந்ததா?’’
மாணவர்கள் :- ‘‘புரிந்தது டீச்சர்’’
ஆசிரியர் :- ‘‘குட் (Good – நன்று)… குப்பைத்தொட்டிக்கு ஆங்கிலத்தில் Trash Can அல்லது Bin ன்னு சொல்லலாம். காலையில நீங்க எல்லோரும் பள்ளிக்கு வந்ததும் உங்க வகுப்பறைய ப்ரூம் (Broom –
துடைப்பம்) மூலம் சுத்தம் பண்றீங்க. அதுக்கு அப்பறம் என்ன பண்ணுவீங்கனு யாரல்ல சொல்ல முடியும்?’’
ஆசிரியர் கேள்வி கேட்டதும் அந்த வகுப்பில் இருந்த பல மாணவர்கள் கையை உயர்த்தினர். கண்ணன் முதலில் கையை உயர்த்தியிருந்தான். அதனால் ஆசிரியர் கண்ணனை சொல்ல சொன்னார்.
ஆசிரியர் :- ‘‘கண்ணன் சொல்லுங்க.’’
கண்ணன் :- ‘‘நாம காலையில வந்து வகுப்பறைய சுத்தம் பண்ணிட்டு குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுவோம். அதுக்கு அப்பறம் குப்பைகளை எரிக்குற இடத்தில் குப்பைத்தொட்டியை கொண்டு போய் குப்பைகளை கொட்டிட்டு வருவோம் டீச்சர் (Teacher – ஆசிரியர்)’’
ஆசிரியர் :- ‘‘வெரி குட் (Very good – மிக்க நன்று) கண்ணன்.. நீங்க காலையில வந்ததும் சுத்தம் பண்ணி குப்பைய எரிக்குற இடத்துல போடுறீங்க. அது ரொம்ப நல்ல பழக்கம்.. இப்படி நீங்க பண்றதால குப்பைத்தொட்டியில் எந்த குப்பையும் முதலாம் பாடத்துக்கு இருக்காது. அதனால இந்த குப்பைத்தொட்டி தேவையில்லை தானே நமக்கு? கமலா சொல்லுங்க’’
கமலா என்ற மாணவி :- ‘‘டீச்சர்.. நாம எல்லோரும் பென்சில் சீவிட்டு போட குப்பைத்தொட்டி வேணுமே.’’
ஆசிரியர் :- ‘‘குட் (Good) கமலா.. ஆமா வகுப்பறையில் குப்பைத்தொட்டி இல்லனா, நாம பென்சில் சீவிட்டு தரையில் போடுவோம். சாப்பிட்டு விட்டு பாலிதீன், காகிதம்னு எல்லாத்தையும் தரையில போட்டுறுவோம்… அப்புறம் நம்ம வகுப்பறையே குப்பையாகிடும். அது ஒரு குப்பை வகுப்பு…. அசிங்கமா இருக்குனு யாருமே வரமாட்டாங்க… நாம சுத்தமில்லாதவங்கனு சொல்லுவாங்க…. ஆனா தேவையில்லாத காகிதம், பாலிதீன் போன்றவற்றை நாம குப்பைத் தொட்டியில் போட்டால் வகுப்பறையும் சுத்தமா இருக்கும். அந்த வகுப்பு மாணவர்கள் சுத்தமானவங்க… நல்ல பிள்ளைகள். அவங்க வகுப்பை சுத்தமா வெச்சிருக்காங்கனு எல்லோரும் பாராட்டுவாங்க. உங்களை அப்படி எல்லோரும் பாராட்டனுமா?’’
மாணவர்கள் :- ‘‘ஆமா டீச்சர் (Teacher – ஆசிரியர்)…’’
ஆசிரியர் :- ‘‘அப்படினா இனிமேல் யாரும் குப்பைகளை தரையில் போடக்கூடாது. அப்படி குப்பைகள் எதுவும் தரையில் இருக்குறத பார்த்தா கண்டிப்பா எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுடனும். அப்போ தான் நீங்க சிறந்த மாணவன்… எல்லோருக்கும் நீங்க முன் உதாரணமாக இருக்க முடியும்… நான் சொன்னதெல்லாம் இன்னையிலிருந்து செய்வீங்களா?’’
மாணவர்கள் :- ‘‘ஆமா டீச்சர் (Teacher – ஆசிரியர்) கண்டிப்பா செய்வோம்’’
ஆசிரியர் :- ‘‘பசங்களா? வகுப்பறைகளுக்கு குப்பைத்தொட்டி தேவையா? இல்லையானு எல்லோரும் சேர்ந்து சொல்லுங்க’’
மாணவர்கள் :- ‘‘கட்டாயமாக தேவை டீச்சர் (Teacher – ஆசிரியர்)’’
ஆசிரியர் :- ‘‘குட் (Good – நன்று)… பாடம் முடிய இன்னும் சிறிது நேரம் தான் இருக்கு. நான் பயிற்சி தாரேன் சீக்கிரம் பண்ணி காட்டுங்க’’
பள்ளியிலுள்ள ஒவ்வொரு வகுப்பறைக்கும் குப்பைத்தொட்டி அவசியமானது. ஒவ்வொரு நாள் காலையும் வகுப்பறை குப்பைத்தொட்டியிலுள்ள குப்பைகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். வகுப்பறையின் தரையில் குப்பைகளைக் கண்டால், கட்டாயமாக அதனை குப்பைத்தொட்டியில் போடுவது சிறந்த மாணவ ஒழுக்கமாகும். இதனால் சுத்தமான வகுப்பறைச் சூழலில் நம்மால் கற்க முடியும். சுத்தமான வகுப்பறையும் நம் ஆரோக்கியத்தின் ஒரு அங்கமாகும்.
பயிற்சி – 01
சரியாக இருந்தால் சரி எனவும் தவறாக இருந்தால் தவறு எனவும் அடைப்பிற்குள் அடையாளமிடுக.
1) வகுப்பறையை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் ( )
2) வகுப்பறைகளுக்கு குப்பைத்தொட்டி தேவையில்லை ( )
3) குப்பைகளை வீசாமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் ( )
4) குப்பைகளை எரிக்க முடியாது ( )
5) நல்ல மாணவர்கள் வகுப்பறையை சுத்தமாக வைத்திருப்பார்கள் ( )
பயிற்சி – 02
பின்வரும் உதாரணத்தை உற்று நோக்கி பாடத்தில் இடம்பெற்ற ஆங்கில சொற்களுக்கான தமிழ் பொருளை எழுதுக.
உதாரணம் : Good morning – காலை வணக்கம்