கண்ணனின் அப்பாவும், அம்மாவும் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு கண்ணனும் யாழினியும் உதவிக் கொண்டிருந்தார்கள்.
யாழினி : ‘‘அண்ணா, நாம கதவை மூடி வைத்திருந்தாலும் எப்படி வீட்டிற்குள் தூசு வருகிறது?’’
கண்ணன் : ‘‘மண்ணிலிருந்து வெளிப்படும் புழுதியானது காற்றினால் பரவக்கூடியது. புழுதி என்பது அளவில் மிகச் சிறியது. மிகச்சிறிய துகள்கள் போன்றது. காற்று எல்லா இடத்திலும் உட்புகக்கூடியது என்பதால், அது எளிதாக சிறு துவாரத்தின் மூலமும் கூட தூசினை வீட்டிற்குள் கொண்டு வந்து விடுகிறது.’’
யாழினி : “அண்ணா, நாம் வீட்டை சுத்தம் பண்ணும் போது எவற்றையெல்லாம் சுத்தம் பண்ணனும்னு சொல்லிக் கொடுக்குறீர்களா?’’
கண்ணன் : ‘‘நானும் இன்று தான் முதல் தடவை செய்கிறேன் யாழினி. அப்பா, அம்மாவை பார்த்து கத்துக்கலாம்’’
யாழினி : ‘‘சரிங்க அண்ணா’’
அப்பா : ‘‘உங்க இரண்டு பேருக்கும் நானும் அம்மாவும் கற்றுத் தருகிறோம்.’’
அம்மா : ‘‘நான் இப்போ சொல்லித் தருவது வீட்டிற்கு மட்டுமில்லை பொது இடங்களுக்கும் பொருந்தும்.
இவ்வாறு தான் நம் வீட்டின் சுத்தத்தையும் பொது இடங்களின் சுத்தத்தையும் பேண வேண்டும்.’’
அப்பா : ‘‘ஆமா, அம்மா சொல்வது சரி. அதுமட்டுமல்லாமல்.
இவற்றையெல்லாம் செய்தால் நிச்சயமாக ஒவ்வொரு வீடும் பொது இடங்களும் அழகாகவும் சுத்தமாகவும் இருக்கும். புரிகிறதா?’’
கண்ணன், யாழினி : ‘‘ஆமாம் அப்பா’’
அப்பா : ‘‘இப்போ நம்ம வீட்டை சுத்தம் பண்ணலாமா?’’
கண்ணன், யாழினி : ‘‘கண்டிப்பாக அப்பா’’
வீடுகள் மற்றும் பொது இடங்கள் விரைவாக அசுத்தமடையக் கூடிய இடங்களாகும். காற்றினால் பரவும் புழுதியினால் ஜன்னல்கள், நுழைவாயில்கள், மற்றும் அனைத்து மரச்சாமான்களும் தூசு படிந்து விடுவதால், தினமும் அவற்றை துடைத்து சுத்தம் செய்வது நமது கடமையாகும்.
பயிற்சி – 01
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
1) தூசு எதன் மூலம் பரவுகிறது?
…………………………………………………………………………………………………………………………..
2) இரண்டு பர்னிச்சர்களின் பெயரைக் குறிப்பிடுக.
I. …………………………………………………………………………………………………………………………..
II. ………………………………………………………………………………………………………………………….
3) வீட்டில் அல்லது பொது இடங்களில் சுத்தம் செய்யக் கூடிய மூன்று இடங்களை குறிப்படுக.
I. …………………………………………………………………………………………………………………………..
II. ………………………………………………………………………………………………………………………….
III. …………………………………………………………………………………………………………………………
4) வீட்டில் காணக்கூடிய அறைகள் இரண்டினை குறிப்பிடுக.
I. …………………………………………………………………………………………………………………………..
II. ………………………………………………………………………………………………………………………….
05) பொது இடங்களில் செய்யக்கூடாத விஷயங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
I. …………………………………………………………………………………………………………………………..
II. ………………………………………………………………………………………………………………………….