நந்து மாமா மாலை நேர தேநீரை அருந்திக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தன்னுடைய தேநீரை எடுத்துக் கொண்டு நந்து மாமாவின் பக்கத்தில் அமர்ந்தான் கேசவ்.
கேசவ் : “மாமா போக்குவரத்து விதிகளில் 108 ஆம்புலன்ஸ் பற்றியும் பாதையில் அதனைக் கண்டால் பின்பற்ற வேண்டிய போக்குவரத்து விதிகளையும் சொல்லித் தருகிறீர்களா?”
நந்து மாமா : “சாப்பிடும் போது பேசக்கூடாது கேசவ். தேநீர் அருந்தியதும் கூறுகிறேன்”
கேசவ் : “சரி மாமா. மன்னிக்கவும்”
(நந்து மாமா மற்றும் கேசவ் தேநீர் அருந்திவிட்டு 108 ஆம்புலன்ஸை பாதையில் கண்டால் பின்பற்ற வேண்டிய சாலை விதிகளைப் பற்றி உரையாடத் தொடங்கினர். வாருங்கள் நாமும் அவற்றை கற்கலாம்.)
நந்து மாமா : “கேசவ், 108 ஆம்புலன்ஸ் என்பது அவசர சிகிச்சைக்காக வேண்டி நோயாளிகளைக் கொண்டு செல்லும் வண்டியாகும். இதை மருத்துவ அவசர ஊர்தி என்று தமிழில் கூறுகிறோம். வெள்ளை நிறத்தில் காணப்படும் அவ்வண்டி வருவதனைத் தெரியப்படுத்த வண்டியில் விளக்கு ஒளிர்வதுடன் சைரன் ஒலியும் இடை விடாது ஒலித்துக் கொண்டே செல்லும். இது அவசர நிலையை தெரிவிப்பதாகும். இதனைக் கேட்கும் போது அது வெறும் வாகனத்தின் ஒலியல்ல. உள்ளே இருப்பது ஓர் துடிக்கும் உயிர் என்பதை உணர வேண்டும்.
ஆம்புலன்ஸ் 108 வழங்கும் சேவைகள் :
கேசவ் : “ஒரு பாதசாரியாக மற்றும் ஓட்டுனராக ஆம்புலன்ஸைக் கண்டால் என்ன செய்ய வேண்டும் மாமா?”
நந்து மாமா : “நல்லதொரு கேள்வி. மருத்துவ அவசர ஊர்தியைக் காணும் போது ஒரு வாகனத்தின் ஓட்டுனர் பின்பற்ற வேண்டிய போக்குவரத்து விதிமுறைகள் கீழ்வருமாறு :
அத்துடன் 108 அவசர மருத்துவ ஊர்தியைக் காணும் போது அது நம்மைக் கடந்து செல்லும் வரையில் பாதை மாறுவதற்கான சமிக்ஞை(Signal) காட்டப்பட்ட போதிலும் பாதசாரிகள் பாதை மாறக் கூடாது.
108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போலி அழைப்புக்களை மேற்கொள்பவர்கள் ஒருவரின் இறப்புக்கு மறைமுகமான காரணியாகிறார். இவ்வாறான சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது. உயிரைக் காக்கும் இந்த அவசர சேவைக்கு நாமும் நம்முடைய பங்களிப்பை 108 ஆம்புலனைஸ் வண்டியைக் காணும் போது வழங்குவோம்”
கேசவ் : “சரி. உங்களிடமிருந்து போக்குவரத்து விதிமுறைகளைக் கற்றுக் கொண்டேன். நன்றி நந்து மாமா!”
108 ஆம்புலன்ஸ் என்பது அவசர மருத்துவ ஊர்தியாகும். இது அவசர சிகிச்சைக்காக நோயாளிகளைக் கொண்டு செல்கிறது. ஆகவே அவசர மருத்துவ ஊர்தியைக் காணும் பட்சத்தில் மேற்சொன்ன 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடப்பதனால் ஓர் உயிரைக் காப்பாற்ற பங்களிப்போம்.
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக
01) ஆம்புலன்ஸ் என்பது ஆங்கில மொழிச்சொல். அதன் தமிழ் பதம் யாது?
……………………………………………………………………………………………………………………………………………………………………
02) 108 ஆம்புலன்ஸ் வழங்கும் சேவைகள் இரண்டினைக் குறிப்பிடுக.
I. ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
II. ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
03) ஆம்புலன்ஸ் சேவை வருவதனை உணர்த்தும் ஒலியின் பெயரைக் குறிப்பிடுக.
……………………………………………………………………………………………………………………………………………………………………
04) வாகனத்தை செலுத்திக் கொண்டிருக்கும் வாகன ஓட்டுனர் அவசர மருத்துவ ஊர்தியைக் காணும் போது பின்பற்ற வேண்டிய போக்குவரத்து விதிமுறைகளில் இரண்டினைக் குறிப்பிடுக.
I. ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
II. ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
05) பாதசாரி 108 ஆம்புலன்ஸ் வருவதைக் காணும் போது பின்பற்ற வேண்டிய போக்குவரத்து விதிமுறையைக் குறிப்பிடுக.
……………………………………………………………………………………………………………………………………………………………………