• முகப்பு
  • போக்குவரத்து விதிகள்
  • 7.2 போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவோம்

7.2 போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவோம்

உள்ளடக்கம்

கேசவ் சென்னையில் வசித்து வந்தான். ஒருநாள் மும்பையிலுள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக தன் நந்தன் மாமாவின் காரில் சென்று கொண்டிருந்தான். இந்த பயணத்தின் போது நந்தன் மாமா போக்குவரத்து விதிகளைக் கற்றுக் கொடுத்தார்.

கேசவ் : “நந்து மாமா, நீங்க சூப்பரா கார் ஓட்டுறீங்க. ஆனால் ரொம்ப வேகமாக போக மாட்டேங்குறீங்க! மிதமான வேகத்தில் தான் வாகனத்தை ஓட்டுறீங்க. ஏன் மாமா?”

நந்து மாமா : “கேசவ், வாகனத்தை ஓட்டும் ஓட்டுனர்கள், பொது வாகனத்தில் பயணிப்போர் மற்றும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பாதசாரிகள் பின்பற்ற வேண்டிய போக்குவரத்து விதிகள் உள்ளன. வாகனங்களை வேகமாக செலுத்தக் கூடாது என்பதும் போக்குவரத்து விதியாகும். அவற்றை மீறும் போது தான் விபத்துக்கள் நேர்கின்றன. போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதால் விபத்துக்களை தடுக்க முடியும். வாகனம் ஓட்டுபவரிடம் கண்டிப்பாக பின்வரும் ஆவணங்கள் இருக்க வேண்டும். அவையாவன :

  • செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
  • வாகன பதிவு சான்றிதழ்
  • செல்லுபடியாகும் வாகன காப்பீட்டு பாலிசி
  • செல்லுப்படியாகும் PUC (Pollution Under Control) சான்றிதழ்

இவற்றுடன் சாலை சிக்னல்கள் பற்றிய அறிவையும் ஓட்டுநர் கொண்டிருக்க வேண்டும். அது தவிர ஓட்டுநர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பின்வருமாறு :

  • சாலை சிக்னல் மற்றும் குறியீடுகள் பற்றிய அறிவைக் கொண்டிருப்பதோடு அவற்றை பின்பற்றுதல் வேண்டும்.
  • வாகனத்தை அதிவேகமாக செலுத்தக் கூடாது.
  • இரு வழி நெடுஞ்சாலைகளில் இடது பக்கமாக வாகனத்தைச் செலுத்த வேண்டும்.
  • சந்திப்புகளில், பாதை மாறுகையில் வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும்.
  • போதையில் வண்டி ஓட்டக் கூடாது.
  • தொலைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் செலுத்தக் கூடாது.
  • வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை செலுத்தல் கூடாது.
  • வாகனத்திலிருந்து வெளியே தலையை நீட்டக் கூடாது.
  • பாதையில் துப்பவோ, குப்பைகளை வீசவோ கூடாது.
  • மருத்துவ அவசர ஊர்திக்கு (Ambulance) வழி விட வேண்டும்.
  • குறிப்பிட்ட இடங்களில் வாகன ஒலி எழுப்பியை (Horn) பயன்படுத்தல்.
  • பொது வாகனத்தில் ஓட்டுனர் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்தக் கூடாது.

ஒரு ஓட்டுனர் மேற்கூறியவற்றை பின்பற்றுவது கட்டாயமாகும். மீறினால் போலீசாரால் தண்டிக்கப்படுவர்”

கேசவ் : “மாமா, அப்படியானால் பாதசாரிகள் பின்பற்ற வேண்டிய போக்குவரத்து விதிகள் எவை?”

நந்து மாமா : “நெடுஞ்சாலையில் நடந்துச் செல்வோர் பாதசாரிகள் எனப்படுகின்றனர். ஒரு பாதசாரியாக நாம் கடைப்பிடிக்க வேண்டியவை பின்வருமாறு :

  • வலது பக்கமாக நடந்து செல்லுதல்
  • சாலை சிக்னல்கள் இடப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே பாதையைக் கடத்தல்
  • மஞ்சள் அல்லது வெள்ளைக் கோட்டினால் பாதையைக் கடத்தல்
  • ஒருவர் பின் ஒருவராக செல்லுதல்
  • பாதையில் எச்சில் துப்பக் கூடாது
  • பாதையில் குப்பைகளை வீசக்கூடாது

பேருந்து போன்ற பொது வாகனங்களில் பயணம் செய்யும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டியவை :

  • பயணச்சீட்டைப் பெற்று பயணித்தல்
  • படிக்கட்டுகளில் நிற்காமல் உரிய இருக்கையில் அமர்ந்து பயணித்தல்
  • வாகனம் நிறுத்தப்படும் வாகன நிறுத்துமிடங்களில் இறங்குதல்
  • வாகனம் ஓடும் போது இறங்காதிருத்தல்
  • ஓட்டுனருக்கும் மற்ற பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தாதிருத்தல்
  • கண்ணாடி கதவுகள் இருப்பின் மெதுவாக திறந்து மூடுதல்
  • வாகன இருக்கைகளை சேதப்படுத்தாதிருத்தல்
  • மதகுருமார்கள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்வதைத் தவிர்த்தல்

இந்த சாலை ஒழுக்க விதிகளைப் பின்பற்ற வேண்டியது நம்முடைய கடமையாகும்.”

கேசவ் : “நந்து மாமா, சாலை சிக்னல்கள் மற்றும் சாலைக் குறியீடுகள் என்று கூறினீர்களே அவற்றை கற்றுத் தருகிறீர்களா?”

நந்து மாமா : “அவற்றை படங்களின் மூலம் விளக்குவதே சிறந்ததாக இருக்கும். வீட்டிற்கு சென்ற பின் உங்களுக்கு கூறுகிறேன்”

கேசவ் : “நன்றி நந்து மாமா!”

குறித்த பயணத்தை நிறைவு செய்த பின் நந்து மாமா, கேசவ்விற்கு பின்வரும் புகைப்படம் மூலமாக சாலை சிக்னல்கள், கைச்சமிக்ஞைகள் பற்றி விளக்கினார். நாமும் அவற்றை

ஒளிச் சமிக்ஞைகள் (Signals) அல்லது சாலைச் சமிக்ஞை விளக்கு
வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பாதசாரிகளுக்கு பாதையைக் கடப்பதற்காகவும் சாலைச் சமிக்ஞை விளக்குகள் இடப்பட்டுள்ளன. அவற்றின் நிறம் குறிக்கும் தகவலை அறிந்து செயல்பட வேண்டும். அவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

  • சிவப்பு விளக்கு எரியும் போது வாகனத்தை நிறுத்த வேண்டும்.
  • மஞ்சள் விளக்கு எரியும் போது வாகனத்தை புறப்பட தயார் நிலையில் வைத்திருருக்க வேண்டும்.
  • பச்சை விளக்கு எரியும் போது புறப்பட வேண்டும்

உத்தரவு சின்னம்

உத்தரவிடும் சாலைச் சமிக்ஞைகள்

வட்டவடிவத்தினுள் காணப்படும் சாலைச் சமிக்ஞைகள் அல்லது சாலைக் குறியீடுகள் யாவும் உத்தரவிடும் சாலைச் சமிக்ஞைகள் எனப்படுகின்றன. அவற்றில் சில கீழ்வருமாறு :

நிறுத்துக

வழி விடுக

செல்லத் தடை

ஒரு வழி செல்லத் தடை, வரலாம்

ஒரு வழி செல்லலாம், வருவதற்கு தடை

மோட்டார் வாகனங்கள் செல்லத் தடை

லாரி செல்லத் தடை

மாட்டுவண்டி செல்ல தடை

குதிரைவண்டி செல்லத் தடை

கைவண்டி செல்லத் தடை

மாட்டுவண்டி, கைவண்டி செல்லத் தடை

வலதுபுறம் திரும்ப தடை

இடதுபுறம் திரும்ப தடை

பாதசாரிகள் செல்லத் தடை

மிதிவண்டி செல்லத் தடை

U திருப்பம் திரும்ப தடை

முந்தி செல்லத் தடை

ஒலி எழுப்பத் தடை

வாகனங்கள் நிறுத்தி வைக்க தடை

வாகனங்கள் நிற்க அல்லது நின்று கொண்டிருக்க தடை

வேகவரம்பு (50 கி.மீ)

உயர வரம்பு (3.5 கிமீ)

 

 

எச்சரிக்கை சின்னம்

எச்சரிக்கை சாலைக் குறியீடுகள் அல்லது சமிக்ஞைகள்

பொதுவாக எச்சரிக்கை சாலைச் சமிக்ஞைகள் யாவும் முக்கோண வடிவத்தினுள் காணப்படும். இந்தியாவில் 40 எச்சரிக்கை குறியீடுகள் காணப்படுகின்றன. அவற்றில் சில பின்வருமாறு :

முன்னால் அகன்ற சாலை

முன்னால் குறுகிய சாலை

முன்னால் ஒடுக்கமான பாலம்

முன்னால் பள்ளிக்கூடம்

முன்னால் மிதிவண்டி குறுக்கீடு

முன்னால் குறுக்கு சாலை

சரிவான சாலை இறக்கம்

வலதுபுறம் வளைவு பாதை

இடதுபுறம் வளைவு பாதை

விலங்குகள் கவனம்

முன்னால் பாறைகள் உருளும்

முன்னால் ஆட்கள் வேலை செய்கிறார்கள்

பக்க வீதி வலது

பக்க வீதி இடது

T’ சாலை முடிவு

முன்னால் பெரிய சாலை

மன்னால் பெரிய சாலையை கடக்க

முன்னால் சுற்று வளைவு

முன்னால் சோதனைச் சாவடி

முன்னால் ஆபத்தான பாலம்

பாதுகாப்பற்ற புகைவண்டி பாதை 200மீ

பாதுகாப்பற்ற புகைவண்டி பாதை 50-100மீ

பாதுகாப்பான புகைவண்டி பாதை 200மீ

பாதுகாப்பான புகைவண்டி பாதை 50-100மீ

 

 

தகவல் கூறும் சாலைச் சமிக்ஞைகள்

குறிப்பிட்ட சில பொது இடங்களின் அமைவிடங்களை குறிப்பதற்காக பயன்படும் சாலைச் சமிக்ஞைகள் யாவும் தகவல் கூறும் சாலைச் சமிக்ஞைகளில் அடங்குகின்றன. அவற்றில் சில பின்வருமாறு :

முதலுதவி

உணவு விடுதி

சிற்றூண்டி விடுதி

ஓய்வகம்

தொலைப்பேசி

மருத்துவமனை

பெற்றோல் பங்க்

வெள்ள அளவுமானி

முன்னால் சாலை இல்லை

பக்கசாலை இல்லை

முச்சக்கரவண்டி நிறுத்தவும்

கார் நிறுத்தவும்

வாகனங்களை வலது திசையில் நிறுத்தவும்

வாகனங்களை வலது, இடது ஆகிய இரு திசைகளிலும் நிறுத்தவும்

 

போக்குவரத்து பொலிசாரின் சமிக்ஞைகள்

நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பொலிசார் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கையால் சமிக்ஞை செய்கின்றனர். அவை கீழ்வருமாறு :

  • முன்னால் வரும் வாகனங்களை நிறுத்துக
  • முன்னால் வரும் வாகனங்கள் செல்க
  • முன்னாலும் பின்னாலும் வரும் வாகனங்களை நிறுத்துக
  • எல்லா வாகனங்களையும் நிறுத்துக
  • வலது பக்கம் வரும் வாகனங்கள் செல்க
  • இடப்பக்கம் வரும் வாகனங்கள் செல்க

சுருக்கம்

ஓட்டுனர், பாதசாரிகள் மற்றும் பொது வாகனப் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய போக்குவரத்து விதிகள், ஓட்டுனரிடம் காணப்பட வேண்டிய ஆவணங்கள், சாலைச் சமிக்ஞைகள், ஒளிச் சமிக்ஞைகள், போக்குவரத்து போலீசார் காட்டும் கை சமிக்ஞைகள் என போக்குவரத்தில் மேற்கொள்ள தேவையான சாலை விதிகளை இப்பாடத்தின் மூலம் கற்றுக் கொண்டிருப்பீர்கள். நாமும் இவற்றைப் பின்பற்றி நடந்து விபத்துக்களைத்

பயிற்சி

பயிற்சி – 01

பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.

1) பாதசாரிகள் என்பவர்கள் யார்?
……………………………………………………………………………………………………………………………………………………….

2) நெடுஞ்சாலைகளில் பாதசாரிகள் பின்பற்ற வேண்டிய சாலை விதிகள் இரண்டைக் குறிப்பிடுக.
1. ……………………………………………………………………………………………………………………………………………

2. ……………………………………………………………………………………………………………………………………………

3) ஓட்டுனரிடம் காணப்பட வேண்டிய ஆவணங்களைக் குறிப்பிடுக.
……………………………………………………………………………………………………………………………………………….

4) ஓட்டுனர் கடைப்பிடிக்க வேண்டிய போக்குவரத்து விதிமுறைகள் மூன்றை எழுதுக.
1. …………………………………………………………………………………………………………………………………………….
2. …………………………………………………………………………………………………………………………………………….
3. …………………………………………………………………………………………………………………………………………….

5) பொது வாகனங்களில் பயணம் செய்யும் போது நாம் பின்பற்ற வேண்டிய ஒழுக்க விதிகள் மூன்று தருக.
1. …………………………………………………………………………………………………………………………………………….
2. …………………………………………………………………………………………………………………………………………….
3. …………………………………………………………………………………………………………………………………………….

 

பயிற்சி 02

சரியான விடையின் கீழ் கோடிடுக.

1) உத்தரவிடும் சாலைச் சமிக்ஞைகள் காணப்படும் வடிவம்
1. வட்டம்   2. செவ்வகம்   3. முக்கோணம்

2) எச்சரிக்கை சாலைச் சமிக்ஞைகள் காணப்படும் வடிவம்
1. வட்டம்   2. செவ்வகம்   3. முக்கோணம்

3) போக்குவரத்து பொலிசார் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த சமிக்ஞை செய்யப் பயன்படுத்துவது
1. தலை   2. கை   3. வாய்

4) பாதையைக் கடக்க பாதசாரிகள் பயன்படுத்துவது
1. வெள்ளைநிறக் கோடு   2. மஞ்சள் நிறக்கோடு   3. இரண்டும் சரி

5) மஞ்சள் நிற விளக்கு ஒளிர்ந்தால் செய்ய வேண்டியது
1.வாகனம் நிறுத்துக   2.வாகனம் செல்லலாம்   3.வாகனம் செல்லத் தயாராகு

 

பயிற்சி – 03

சாலைச் சமிக்ஞைகள், ஒளி சமிக்ஞைகள், கைச் சமிக்ஞைகள் போன்றவற்றை படங்களுடன் நினைவு கூறுக.