சிறுவர் தினத்தை முன்னிட்டு “விபத்தில்லா தேசம்” என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி எங்கள் பள்ளியில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பள்ளியின் மாணவத் தலைவர்களில் ஒருவரான மகேஷ் விபத்தில்லாத தேசத்தை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளைப் பற்றி புள்ளி விபரங்களுடன் உரையாற்றினார். வாருங்கள் மாணவத் தலைவர் மகேஷ் ஆற்றிய உரையை நாமும் பார்க்கலாம்.
மகேஷ் : “அனைவருக்கும் வணக்கம்! நமது பாரத தேசத்தை விபத்தில்லா தேசமாக மாற்றுவதற்கான இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். விபத்தில்லா தேசமாக எவ்வாறு மாற்றுவது என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அது மிகவும் எளிதானது. அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு மட்டும் போதுமானது.
சாலை விபத்துக்கள் எவ்வாறு உருவாகிறது எனச் சிந்தித்து பாருங்கள். போக்குவரத்திற்குரிய சட்டத்திட்டங்களை மதிக்காமல் பயணிப்பதாலே பெருமளவான விபத்துக்கள் நிகழ்கின்றன. அவ்வாறான சில காரணங்களை இங்கே கூறுகிறேன்.
இது போன்று இன்னும் பல காரணங்கள் விபத்துக்களினால் இழக்கப்படும் உயிருக்கு நாம் தான் காரணம் என்பதை தெளிவாக்குகின்றன.
2016 – 2018 வரை இந்தியாவில் நடைப்பெற்ற சாலை விபத்துக்களினால் பதிவாகிய மரணங்களின் புள்ளி விபரங்கள் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது :
2016 உடன் ஒப்பிடுகையில் 2018 இல் தமிழ்நாட்டில் விபத்துக்களினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5000 எண்ணிக்கை அளவில் குறைந்துள்ளது. இது மிக்க நல்ல விஷயம் தான் என்றாலும், 2018 இல் விபத்தினால் தமிழகத்தில் பதிவாகிய மரணங்கள் 12,216. இந்த நிலை மாற வேண்டும். சாலை விபத்துக்கள் பூஜ்யம் எனக் காட்டும் காலத்தை நாம் தான் கொண்டு வர வேண்டும். விபத்துக்களைத் தடுப்பதற்காக ஒளி விளக்கு சிக்னல்கள், சாலை விதிமுறை குறியீடுகள், போக்குவரத்து போலீசாரின் கை சிக்னல்கள், வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒளி விளக்குகள் மற்றும் ஒலி எழுப்பி, பாதசாரிகள் பின்பற்ற வேண்டிய சாலை விதிமுறைகள், ஓட்டுனரிடம் இருக்க வேண்டிய ஆவணங்கள், ஓட்டுநர் பேண வேண்டிய போக்குவரத்து விதிகள், 108 ஆம்புலன்ஸ் (அவசர மருத்துவ ஊர்தி) வருகையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என நமது பாதுகாப்புக்காக பல சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றை நம்மில் எத்தனை பேர் பின்பற்றுகிறோம் என்பது கேள்விக்குறி தான்!
இங்கு காட்டப்பட்டுள்ளதை நன்கு கவனியுங்கள். இது 2018ஆம் ஆண்டிற்குரியது. 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டோரின் இறப்பே பெருமளவில் இருக்கின்றன. நாளைய சந்ததி இவ்வாறு விபத்தில் அழியவா பிறக்கிறது? சிந்தியுங்கள்.
விபத்துக்கள் நடைபெற்ற முறைகளை இங்கே காணலாம். மோட்டார் சைக்கிளின் விபத்துக்களே அதிகமுள்ளது. இளைஞர்கள் தான் பொதுவாகவே மோட்டார் சைக்கிள் பிரியர்களாக இருக்கின்றனர். சாதனைகள் புரிய வேண்டிய வயதில் உங்கள் அலட்சியத்தால் அழகான எதிர்காலத்தை இழக்காதீர்கள்! வேகமாக சென்று முட்டி மோதி இறப்பதற்காகவா அத்தனை ஆசையுடன் மோட்டார் சைக்கிளை வாங்குகிறீர்கள்? சிந்தியுங்கள்!
நமது தமிழகத்தில் சாலை விபத்துக்களினால் மாத்திரம் ஒரு வருடத்திற்கு சுமார் 15,000 பேரும், ஒரு நாளைக்கு 42 பேரும், ஒரு மணிநேரத்திற்கு 2 பேரும் இறப்பதாக புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அப்படியானால் இரண்டு வருடங்களில், ஐந்து வருடங்களில், பத்து வருடங்களில் நாம் இது வரை எத்தனை பேரை இழக்கின்றோம்? நம்மை சாரந்தவர்களின் இழப்பு நமக்கு வலியை ஏற்படுத்துவதைப் போலவே நம்முடைய இழப்பும், நம்முடைய கவனக் குறைவினால் ஏற்படும் சாலை விபத்தினால் இழக்கப்படும் இன்னொருவரின் உயிரும் அவர் அவர் அன்பானவர்களுக்கு பேரிழப்பல்லவா?
எடுத்துக்காட்டாக ஒரு கதையை கூறுகிறேன். ஒரு வீட்டில் இரண்டு பள்ளி செல்லும் சிறுவர்களும் அவர்களது பெற்றோர்களும் வசித்து வருகின்றனர். ஒரு வாகன விபத்தில் பெற்றோர்களின் உயிர் பிரிந்து விடுகிறது. எஞ்சியிருக்கும் பிள்ளைகளின் நிலைமை? அவர்களை யார் பொறுப்பேற்பது? அந்த சிறுவர்களின் எதிர்காலத்தை யோசியுங்கள். இது போன்று இன்னும் எத்தனையோ சம்பவங்களை செய்தியாக அறிகிறோம். இதே நிலைமை நாளை உங்களுக்கும் வரலாம். போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடப்பதன் மூலமாக இவ்வாறான பேரிழப்புக்களை தவிர்க்கலாம். விபத்தில்லா தேசம் என்பது உங்கள் கைகளிலே… எனவே போக்குவத்து விதிமுறைகளைக் கடைபிடிப்போம்!
அழைப்பை ஏற்று எங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி!”
சாலை விபத்துக்களுக்கான பெரும்பாலான காரணங்களின் பின்னணி நமது கவனயின்மையும் அலட்சியமும் தான்! நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமானதும் அவசியமானதுமாகும். அவற்றை மீறும்போது நம் உயிரை அல்லது நமது அன்பானவர்களின் உயிரை இழக்க நேரிடலாம். இல்லையென்றால் இன்னொருவரின் மரணத்திற்கு நாம் காரணமாகலாம். ஒருவர் மீது வாகனத்தை மோதி அவர் இறந்து போனால் நீங்கள் உங்கள் வாழ்வை சிறையில் கழிக்க வேண்டிவரும். ஆகவே நமக்காவும் நம் சமூகத்திற்காகவும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடப்போம்.
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
01) சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் மூன்று எழுதுக.
1. …………………………………………………………………………………………………………………………………………………………..
2. …………………………………………………………………………………………………………………………………………………………..
3. …………………………………………………………………………………………………………………………………………………………..
02) சாலை விபத்துக்களை தடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
…………………………………………………………………………………………………………………………………………………………………
03) 2016 முதல் 2018 வரை தமிழ்நாட்டில் மட்டும் சாலை விபத்துக்களால் உயிரிழந்தோர் எத்தனை பேர்?
…………………………………………………………………………………………………………………………………………………………………
04) தமிழகத்தில் ஒரு வருடத்தில் சுமார் எத்தனை பேர் சாலை விபத்துக்களால் மாத்திரம் இறக்கின்றனர்?
…………………………………………………………………………………………………………………………………………………………………
05) 2018ஆம் ஆண்டில் பாதசாரிகள் மீதான விபத்துக்கள் எத்தனை பதிவாகியுள்ளன என்பதைக் குறிப்பிடுக.
…………………………………………………………………………………………………………………………………………………………………