கண்ணன் : “அப்பா, நான் பயிற்சிகளை செய்து முடித்து விட்டேன். எனக்கு அடுத்த பாடத்தை கற்றுத் தாருங்கள்”
அப்பா : “மிக்க நன்று கண்ணா, நீங்கள் பயிற்சிகளைச் சரியாக செய்துள்ளீர்கள். அடுத்த பாடம்
என்னவென்றால், தலைமைத்துவப் பண்புகளில் ஒன்றான வேலைகளை உரிய நேரத்திற்கு செய்தல் என்பதாகும்.”
கண்ணன் : “சரி அப்பா”
அப்பா : “ஒரு தலைவராக இருப்போம் என்ற பாடத்தில், நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்கு உரிய
நேரத்திற்கெல்லாம் வருகைத் தந்தார் என்று உங்களுக்கு நான் கற்று தந்தேன். தலைவர் ஆகுவதற்கு மற்ற பண்புகளைப் போலவே இதுவும் முக்கியமானது என்பதை இதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். உரிய நேரத்திற்கு வேலை செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
கண்ணன் : “அப்பா இத்தனை நன்மைகளைக் கொடுக்க கூடிய நேரத்திற்கு வேலை செய்யும் பழக்கத்தை எவ்வாறு நமக்குள் ஏற்படுத்திக் கொள்வது?’’
அப்பா : “அது அத்தனை கடினமில்லை கண்ணா. உங்களால் பின்பற்ற முடியும். உரிய நேரத்திற்கு வேலை செய்யும் தலைமைத்துவ பண்பை வளர்த்துக் கொள்ள நீங்கள் பின்பற்ற வேண்டியவை பின்வருமாறு,
இவற்றை பின்பற்றினால், நீங்கள் வளர்ந்த பின்னும் உரிய நேரத்தில் வேலை செய்யும் பழக்கம் உங்களிடம் இருக்கும்.’’
கண்ணன் : “ஆமாம் அப்பா. ஏனென்றால், தொட்டிற் பழக்கம் சுடுகாடு வரை. நான் கூறுவது சரி தானே?”
அப்பா : “ஆமாம். மிக்க சரி கண்ணா. உரிய நேரத்தில் வேலைகளை செய்யவில்லை என்றால் பின்வரும் பாதகங்கள் ஏற்படும்.
ஆகவே, தலைமைத்துவதிற்குரிய ஒவ்வொரு பண்பையும் வளர்த்துக் கொள்வதன் மூலம் பிறருக்கு எடுத்துக்காட்டாக சிறந்த தலைவர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்”
கண்ணன் : “நீங்கள் கற்றுக் கொடுத்த தலைமைத்துவப் பண்புகளைப் பின்பற்றி நான் ஒரு சிறந்த தலைவனாக வருவேன் அப்பா”
அப்பா : “உங்களை வாழ்த்துகிறேன் கண்ணா”
தலைமைத்துவப் பண்புகளில் ஒன்றான உரிய நேரத்திற்கு வேலை செய்யும் பண்பை நம்முடைய தினசரி செயல்பாடுகளின் மூலம் வளர்த்துக் கொள்ளலாம் என்பதையும் அதன் விளைவுகளையும் இப்பாடத்தின் மூலம் அறிந்து கொண்டிருப்பீர்கள். எதிர்காலத்தில் ஒரு சிறந்த தலைவராக மிளிர்வதற்கு தலைமைத்துவப் பண்புகள் அனைத்தையும் பின்பற்றி வெற்றி காண்போம்.
பயிற்சி – 01
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
1) இப்பாடத்தின் மூலம் கற்றுக்கொண்ட தலைமைத்துவப் பண்பு யாது?
……………………………………………………………………………………………………………………………………….
2) வேலைகளை அதற்குரிய நேரத்தில் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் மூன்றைக் குறிப்பிடுக.
I. ……………………………………………………………………………………………………………………………………….
II. ……………………………………………………………………………………………………………………………………….
III. ……………………………………………………………………………………………………………………………………….
3) தாமதமாக வேலை செய்வதால் கிடைக்கக் கூடிய தீமைகள் மூன்றைக் குறிப்பிடுக.
I. ……………………………………………………………………………………………………………………………………….
II. ……………………………………………………………………………………………………………………………………….
III. ……………………………………………………………………………………………………………………………………….
4) உரிய நேரத்தில் வேலை செய்யும் பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள் மூன்று தருக.
I. ……………………………………………………………………………………………………………………………………….
II. ……………………………………………………………………………………………………………………………………….
III. ……………………………………………………………………………………………………………………………………….
பயிற்சி – 02
இதுவரை நீங்கள் கற்றுக்கொண்ட எட்டு முக்கியமான தலைமைத்துவப் பண்புகளையும் நினைவு கூறுக.