• முகப்பு
  • சுத்தம்
  • 3.6 பாதைகளில் துப்ப வேண்டாம்

3.6 பாதைகளில் துப்ப வேண்டாம்

உள்ளடக்கம்

ரவியும் கண்ணனும் கடை வீதிக்கு சென்று கொண்டிருந்தார்கள். ரவி, பாதையில் துப்பப் பார்த்ததைக் கண்ட கண்ணன் ரவியைத் தடுத்தான்.

கண்ணன் : ‘‘ரவி இவ்வாறு பாதையில் துப்புவது தவறான பழக்கமாகும், அந்த பக்கம் ஓரமாக போய் துப்பி விட்டு வா’’

தன் நண்பன் சொல்வதைக் கேட்ட ரவியும் பொது இடமால்லாத ஒர் ஒதுக்குப்புற பகுதியில் துப்பினான்.

ரவி : ‘‘கண்ணன், பாதையில் துப்புவதில் என்ன தவறிருக்கிறது? ஏன் என்னை தடுத்தாய்?’’

கண்ணன் : ‘‘யாருடைய எச்சிலாவது உன் கால்களுக்கு மிதிப்படுவதை நீ விரும்புவாயா ரவி?’’

ரவி : ‘‘அது அசுத்தமானது. நான் விரும்ப மாட்டேன்’’

கண்ணன் : ‘‘அதுமட்டுமல்ல. அதனை மிதித்தால் எச்சலில் காணப்படக்கூடிய நோய் விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்கள் நமக்கு நோய்களை தரக்கூடிய அபாயமுள்ளதாக நேற்று ஆசிரியர் கற்பித்தார்’’

ரவி : ‘‘நான் நேற்று பள்ளிக்கு வரவில்லையே. வேறு என்ன கற்பித்தார்கள் என்று எனக்கு சொல்லுகிறாயா கண்ணன்?’’

கண்ணன் : ‘‘சரி. நாம் வீட்டிற்குள் எப்பொழுதுமே துப்புவதில்லை. ஏனென்றால் நாம் நம் வீட்டை சுத்தமாக வைத்திருக்கவே விரும்புவோம்.  பாதையும் அதே மாதிரி தான். வீடு என்பது நம் தனிப்பட்ட சொத்து. பாதை என்பது பொது சொத்து. பொது சொத்துக்களை பாதுகாப்பதும் பொது இடங்களில் சுத்தம் பேணுவதும் நமது கடமையாகும்.’’

ரவி : ஆமாம் கண்ணா. நிச்சயமாக அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்.

கண்ணன் : ‘‘ரவி சற்று சிந்தித்து பார். நடந்து போகையில் ஒருவர் துப்பினால் அது பாதையில் போகும் இன்னொருவரின் வெறும் கால்களுக்கோ, காலணிகளுக்கோ அல்லது நம்முடைய கால்களுக்கோ மிதிப்படும். நாம் இவ்வாறு பாதைகளில் துப்புவதைக் கண்டால் பிறரும் நம்மை வெறுப்பார்கள். ஒரு வாகன ஓட்டுனர், பாதை புறம் திரும்பி துப்புவதினால் ஒரு நபரின் முகத்தில் அல்லது ஆடையில் பட்டு விடக்கூடும். இவ்வாறான ஒரு நிலை நமக்கு நேர்ந்தால் அந்த ஓட்டுனரின் மீது நமக்கு எரிச்சலும் கோபமும் வருமில்லையா??’’

ரவி : ‘‘ஆமாம்.. கண்ணன் நிச்சயமாக கோபம் வரும். நம் முகம் கழுவி சுத்தமான ஆடைகளை அணிந்து வருகையில் இவ்வாறு நிகழ்ந்தால் கோபம் வருவது யாதார்த்தமானது. இப்பொழுது எனக்கு என்னுடைய தவறு புரிகிறது’’

கண்ணன் : ‘‘பாதையில் துப்புவது வெறுக்கத்தக்க செயலாகும். நாம் நம் சௌகரியத்தை மட்டுமே யோசித்து, பிறரைப் பற்றி அக்கறையின்றி பாதையில் துப்பி விட்டு செல்வதால் அதிலுள்ள கிருமித்தொற்றுக்கள் துப்புபவரையும் பிறரையும் பாதிக்கும் என்பதை பெரும்பாலானோர் உணர்வதில்லை’’

ரவி : ‘‘ஆம். நீ சரியாக சொன்னாய். நான் கூட இதனை யோசிக்கவில்லை. கண்ணன் என் தவறை உணர்ந்தேன். அழகாக சுத்தமாக இருக்கும் வீடுகளைப் போலவே பொது இடமான பாதையையும் நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அத்துடன் பாதைகளில் துப்புவது மிக கெட்ட பழக்கம் என்பதையும் உன்னால் இன்று நான் அறிந்து கொண்டேன். இனி ஒருபோதும் நான் இவ்வாறு செய்ய மாட்டேன். நன்றி கண்ணன்’’

கண்ணன் : ‘‘நீ உன் தவறை உணர்ந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அம்மா தேடுவார்கள். வா ரவி…. விரைவாக போகலாம்’’

சுருக்கம்

பாதையானது ஒரு பொதுச்சொத்தாகும். நமது வீடுகளை சுத்தமாக வைத்திருப்பது போலவே பாதையையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பாதைகளில் குப்பைகளை வீசாமல் இருப்பது போலவே துப்பவும் கூடாது. பாதைகளில் நாம் துப்பும் போது கிருமித்தொற்றுக்கு ஆளாக நேரிடும். அத்துடன் அந்த எச்சிலை நாமே தவறுதலாக மிதிக்கவும் கூடும். தன் வினை தன்னைச் சுடும் அல்லவா?? ஆகவே பாதையில் துப்பும் பழக்கம் உங்களிடமிருந்தால் அதனை தவிர்த்திடுங்கள்.

பயிற்சி

பயிற்சி – 1

பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

  1. பாதையில் துப்புவதன் மூலம் பாதிக்கபடும் இரு நபர்கள் யாவர்?
    1. ………………………………………………………   2. …………………………………………………………
  2. பாதையில் துப்பக்கூடாது என்று கண்ணனுக்கு யார் கற்பித்தார்?
    …………………………………………………………………………………………………………………………..

 

பயிற்சி – 2

சரி என்றால் சரி எனவும் தவறு என்றால் தவறு எனவும் அடைப்புக்குள் அடையாளமிடுக.

  • பாதைகளில் துப்புவது சுத்தமானதாகும். (  )
  • பாக்டீரியா என்பது ஒரு நுண்ணுயிரியாகும். (  )
  • பாதையில் துப்புவதால் நோய்கள் பரவக்கூடும். (  )
  • பொது இடங்களை சுத்தமாக்க வைத்திருக்க வேண்டும். (  )
  • பாதையில் துப்புவது நல்ல பண்பாகும். (  )