• முகப்பு
  • பசுமைச் சுற்றுச்சூழல்
  • 8.2 மரங்களை நடுவோம்

8.2 மரங்களை நடுவோம்

உள்ளடக்கம்

ராகுலின் அப்பா அன்று சிறுவர்களுக்கான ஒரு புத்தகத்தை வாங்கி வந்திருந்தார். நேற்று அவனுடைய ஆசிரியர் கற்பித்த சுற்றுச்சூழல் மாசடைவதைத் தவிர்ப்போம் என்ற பாடம் உள்ளடங்களாக மரங்களை நடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்தல், காலநிலை மாற்றம் மற்றும் நீரை சேகரிப்போம் ஆகிய துணை தலைப்புக்கள் உள்ளடங்கிய அருமையான புத்தகம் அது. ஆவலுடன் அப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளவற்றை வாசித்து தரப்பட்டுள்ள பயிற்சிகளுக்கு விடையளிக்கத் தொடங்கினான் ராகுல். ராகுலுடன் சேர்ந்து அந்த பாடங்களை நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள்.

 ராகுல் : “மரங்கள் நமக்கு எண்ணற்ற நன்மைகளை கொடுக்கின்றன. ஆனால் மனிதன் செயல்பாடுகளுக்காக மரங்களை வெட்டுகிறான். இதன் மூலம் பாதகங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சிக்கலான சூழலில் உள்ளோம்.

ஆண்டுதோறும் சுற்றுச்சூழலின் வெப்பநிலை அதிகரித்து வருவதையும், மழை வீழ்ச்சி அடைவதையும் காணமுடிகிறது. இதற்கான காரணிகளாவன :

  • மரங்களை வெட்டுதல்
  • நகரமயமாக்கல்
  • மக்கள்தொகை பெருக்கம்
  • மின்சாதனங்கள் பயன்பாடு
  • எரிபொருள்களால் வெளியேற்றப்படும் வாயுக்கள்
  • அதிகரித்துள்ள கட்டிடங்கள்

மரங்களை நடுவதன் மூலம் நமக்கும் சுற்றுச்சூழலுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவையாவன :

  • மரங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள காற்றை உள்வாங்கி புதிய காற்றை வெளிவிடுகிறது.
  • மண் அரிப்பை தடுத்து நிலத்தை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது.
  • பூமியிலிருந்து நீரை சுழற்சி செய்து, காற்றில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.
  • நாம் வாழ மட்டுமன்றி பறவைகள், பூச்சிகள், விலங்குகளுக்கு அடைக்கலம் அளிக்கிறது.
  • மழை பொழிய உதவுகின்றன.
  • குளிர்ச்சியைத் தருகின்றது.
  • நாம் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனைத் தருகிறது.
  • இளைப்பாற உதவுகிறது.

மரங்களை வெட்டுவதால் இந்த நன்மைகளைப் பெற முடியாமல் செயற்கைத் தீர்வுகளை நாடுகிறோம். என்ன தான் இருந்தாலும் இயற்கைக்கு நிகர் இயற்கை தான். அதன் மொத்த பலனையும் செயற்கைத் தீர்வுகளால் தரமுடிவதில்லை. நம் வாழ்க்கையில் மரங்களின் பங்கு முக்கியமானது.

மழைக்காலங்கள் மரங்கள் நடுவதற்கு உகந்த காலமாகும். கோடைகாலங்களில் இருக்கும் மரங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நாம் தினசரி உண்பதை போல தேவையான உரம் மற்றும் நீர் இட்டு மரங்களை நடுங்கள்.

வீடு, பாதையோரங்கள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இடத்திற்கு தகுந்தவாறு மரங்களை நடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். பல்வேறு தேவைகளுக்காக வருடத்திற்கு சராசரியாக 50 இலட்சம் வரை மரங்கள் வெட்டப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனாலே கோடைகாலத்தில் மட்டுமல்லாது சாதாரண நாட்களிலும் சுற்றுச்சூழல் வெப்பநிலை அதிகரித்திருப்பதனைக் காணலாம்.

மரங்களை வெட்டுவதால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் :

  • மண் அரிப்பு
  • பூமியின் வெப்பம் அதிகரித்தல்
  • இதனால் பனிப்பாறைகள் உருகுதல்
  • காட்டுத்தீ
  • உயிரினங்கள் அழிவடைதல்

உலகில் எஞ்சியிருக்கும் மரங்களினால் தான் நாம் சுவாசிக்க ஆக்ஸிஜன் கிடைக்கின்றது. அதனாலே நாம் இன்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். ஒருவர் தன் வாழ்நாளில் ஒரே ஒரு மரக்கன்றையேனும் நட வேண்டும். அத்துடன் நீங்கள் உங்கள் வீடுகளில் வளர்க்கும் மரக்கன்றுகளைப் பராமரிக்கவும் தவறக்கூடாது. இதனால் நாம் மட்டுமல்ல நம்முடைய எதிர்கால சந்ததியினரும் பயனடைவார்கள்.”

சுருக்கம்

மரங்கள் மனிதனின் உயிர்ப்பை உறுதி செய்யும் ஒன்றாக இருக்கின்றது. மனிதன் சுவாசிக்க தேவையான ஆக்ஸிஜன் மரங்களிலிருந்தே கிடைக்கிறது. ஆகவே நாம் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றையேனும் நட்டு பராமரித்தல் அவசியமாகும். இதனால் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

பயிற்சி

பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
01) இப்பாடத்தின் மூலம் நீங்கள் கற்றுக் கொண்ட விஷயம் யாது?
……………………………………………………………………………………………………………………………………………………………………

02) சுற்றுச்சூழலின் அதிகரித்த வெப்பநிலைக்கான காரணங்கள் மூன்றை எழுதுக.
I. ………………………………………………………………………………………………………………………………………………….
II. ………………………………………………………………………………………………………………………………………………….
III. ………………………………………………………………………………………………………………………………………………….

03) மரங்களை நடுவதன் மூலம் கிடைக்கும் பயன்கள் மூன்றை எழுதுக.
I. ………………………………………………………………………………………………………………………………………………..
II. ………………………………………………………………………………………………………………………………………………..
III. ………………………………………………………………………………………………………………………………………………..

04) மரக்கன்றுகளை நடுவதற்கு உகந்த காலம் எது?
…………………………………………………………………………………………………………………………………………………………………..